மீண்டும் திருவிழா கோலம் பூண்ட மாமல்லபுரம்; சர்வதேச காற்றாடித் திருவிழா தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது சர்வதேச காற்றாடி திருவிழா தொடங்கியுள்ளது.

இன்று தொடங்கி 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த திருவிழாவில், அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வீரர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

சிறுவர்களுக்கு இந்த திருவிழாவில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பெரியவர்களுக்கு ரூ.150லிருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பார்வையாளர்கள் மட்டும்

பார்வையாளர்கள் மட்டும்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது சர்வதேச காற்றாடி திருவிழா தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழா காரணமாக மாமல்லபுரம் மீண்டும் களைகட்டியுள்ளது. இத்திருவிழாவை காண பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. இதில் பார்வையாளராக பங்கேற்க மட்டுமே முடியுமே தவிர போட்டியாளர்களாக பங்கேற்க முடியாது.

 கட்டண சலுகை

கட்டண சலுகை

சிறுவர்களுக்கு இந்த திருவிழாவில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பெரியவர்களுக்கு ரூ.150லிருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரூ.1,000 மதிப்பிலான கட்டணங்களுக்கு அமர்ந்து போட்டியை ரசிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, இந்த திருவிழாவில் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

சுதந்திர தினம்

சுதந்திர தினம்

சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்படும் இந்த திருவிழாவானது, மாமல்லபுரத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த திருவிழாவிற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 14 ஏக்கர் பரப்பளவில் ஓஷன் வியூ பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடத்தை சமன்படுத்தி பாதை அமைக்கப்பட்டுள்ளது. பட்டம் பறக்க விடுதலில் கைதேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு காற்றாடிகளை பறக்கவிட உள்ளனர். அதேபோல இந்த திருவிழா நண்பகல் 12 மணிக்கு பிறகு தொடங்கப்பட்டு இரவு 9 மணிவரை நடத்தப்படுகிறது.

அள்ளும் கூட்டம்

அள்ளும் கூட்டம்

இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் 6 அணியினர் இந்தியர்கள். மற்ற 4 அணியினர் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாட்டை சேர்ந்தவர்களாவார்கள். இதில் சிறார்களுக்கு டிக்கெட் இல்லையென்றாலும், இதற்காக முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும். திருவிழாவில் உணவு கடைகள், இசைக் கச்சேரி என பல என்டர்டெய்ன்மென்ட்கள் உண்டு. சுதந்திர தினத்தையடுத்து தொடர்ந்து விடுமுறை வந்துள்ள நிலையில், இந்த திருவிழாவுக்கு கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+