விஜய் அமைச்சரவையில் அதிகபட்சம் எத்தனை பேர் அமைச்சராகலாம்? லிமிட் என்ன... சட்டம் சொல்வது என்ன!
சென்னை: தமிழ்நாட்டில் 'திமுக - அதிமுக' என்ற இருமுனை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஏற்கனவே முதல்வர் விஜய் உடன் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறுகிறது. இது ஒரு பக்கம் இருக்கத் தமிழகத்தில் அதிகபட்சம் எத்தனை பேர் அமைச்சராக இருக்கலாம்.. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்போது புதிதாக விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது. 1967ம் ஆண்டுக்குப் பிறகு திமுக- அதிமுக இல்லாத ஒரு அரசு முதல்முறையாகத் தமிழகத்தில் அமைந்துள்ளது. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தவெக அதிகாரத்திற்கு வந்தது.

விஜய்
தேர்தல் முடிவுகள் வந்தபோது விஜய் முதல்முறையாக சிஎம் ஆகப் பதவியேற்றார். அவருடன் அப்போது செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த். ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்றைய தினம் மொத்தம் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கிறார்கள். இது தொடர்பான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத், முகமது பர்வேஸ், பார்த்திபன், மரிய வில்சன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்கப் போகிறார்கள்; இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இது ஒரு பக்கம் இருக்கத் தமிழக அமைச்சரவையில் அதிகபட்சமாக எத்தனை அமைச்சர்கள் இருக்கலாம், அது தொடர்பான சட்டம் என்ன என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
சட்டம் சொல்வது என்ன
அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தவும், கட்சிக்குள் இருக்கும் சீனியர்களின் அதிருப்தியைச் சமாளிக்கவும் அமைச்சர் பதவியைக் கொடுத்து வந்தன. முன்பெல்லாம் அமைச்சரவையில் எத்தனை பேர் இருக்கலாம் என்பதற்கு எந்தவொரு லிமிட்டும் இருக்காது. இதனால் ஏகப்பட்ட பேர் அமைச்சர்களாக இருப்பார்கள். ஆனால், இது எல்லாம் 2003ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
லிமிட் என்ன
கடந்த 2003ல் ஆண்டு நாடாளுமன்றத்தில் 91-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் (91st Constitutional Amendment Act, 2003) கொண்டு வரப்பட்டது. அதன்படி, "ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் உட்பட ஒட்டுமொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை, அந்த மாநிலத்தின் மொத்தச் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்தைத் தாண்டக் கூடாது" என்பது திட்டவட்டமாகக் கூறப்பட்டது. அதேநேரம் சிறிய மாநிலமாக இருந்தாலும் அமைச்சர்களின் எண்ணிக்கை 12க்குக் குறைவாக இருக்கக் கூடாது என்ற விதியும் இதில் உண்டு.
அதாவது எந்தவொரு மாநிலமாக இருந்தாலும் குறைந்தபட்சம் 12 அமைச்சர்கள் இருக்க வேண்டும். அதிகபட்சம் எம்எல்ஏக்களில் 15% பேர் வரை அமைச்சரவையில் இருக்கலாம் என்பதே விதி!
உச்சவரம்பும்
இந்த 15 சதவீதக் கணக்கின்படி பார்த்தால், தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 234 ஆகும். இதில் அனுமதிக்கப்பட்டது 15% வரம்பு.. அதன்படி பார்த்தால் 35 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்க முடியும். அதாவது, தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தனது அமைச்சரவையில் 35 அமைச்சர்களை மட்டுமே வைத்திருக்க முடியும். அதைத் தாண்ட முடியாது.
இன்றைய தினம் எம்எல்ஏக்கள் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்கிறார்கள். அதேநேரம் எம்எல்ஏ இல்லை என்றாலும் கூட ஒருவர் அமைச்சராகப் பதவியேற்கலாம்.. அரசியல் சாசன விதிகளின்படி, சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரைக் கூட முதலமைச்சர் தனது அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்க முடியும். ஆனால், அவர் பதவியேற்ற தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தவறினால், 6 மாதக் காலக்கெடு முடிந்ததும் அவரது அமைச்சர் பதவி தானாகவே பறிபோய்விடும்.
-
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications