மம்தா பானர்ஜி வரை சென்ற விஜயகாந்த் மரணம்.. இரங்கல் தெரிவித்த Didi.. எக்ஸ் பக்கத்தில் உருக்கம்
சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்துக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியலுக்கும், திரைத்துறைக்கும் நிறைய தொடர்பு உள்ளது. முன்னணி நடிகராக இருந்த எம்ஜிஆர் முதல்வரானார். அதேபோல் நடிகையாக இருந்த ஜெயலலிதாவும் முதல்வரானார். திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழக மாஜி முதல்வருமான கருணாநிதியும் திரைத்துறையில் வசனங்கள் எழுதி தான் அரசியலில் சாதித்தார்.

இப்படி தமிழகத்தில் நடிகர், நடிகையாக இருந்து அரசியலுக்கு நிறைய பேர் வந்தாலும் இவர்கள் 3 பேர் மட்டுமே முதல்வர் பதவியை அலங்கரித்து உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக கூற வேண்டும் என்றால் நடிகர் விஜயகாந்தை கூறலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் தேமுதிக எனும் கட்சியை தொடங்கி மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினர். அதன்பிறகு எம்எல்ஏவான இவர் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார். நகரம் முதல் கிராமங்கள் வரை அனைத்து தரப்பு மக்களிடம் செல்வாக்கு இருந்த விஜயகாந்த் தமிழக அரசியலில் உச்சபட்ச பதவியான முதல்வர் இருக்கையை எட்டிப்பிடிப்பார் என பலரும் கூறினர்.
இந்த சமயத்தில் தான் திடீரென்று அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தீவிர அரசியலில் இருந்து விலகினார். கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே நடிகர் விஜயகாந்த் பங்கேற்று வந்தார். கடந்த மாதம் 18 ம் தேதி முதல் சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த 12 ம் தேதி வீடு திரும்பினார்.
Profound condolences at the demise of the veteran public leader, DMDK chief and actor Vijayakanth. He passed away today at Chennai and I express my solidarity with his family, friends and countless admirers.
— Mamata Banerjee (@MamataOfficial) December 28, 2023
May his soul rest in peace.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை 6.10 மணிக்கு காலமானார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் விஜயகாந்த் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். சென்னையில் இன்று அவர் காலமானார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்'' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடிகர் விஜயகாந்த்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். விஜயகாந்த் அரசியலில் ஆக்டிவ்வாக இருந்தபோது தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்து மாநிலம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்தார். அதோடு விஜயகாந்த் ஆக்டிவ் அரசியலில் இருந்தபோது பிரதமர் மோடியுடன் நெருக்கமாக இருந்தார் என்பது நினைவில் வைத்து கொள்ள வேண்டியது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications