எழும்பூருக்கு பதில் மாம்பலம்.. தாம்பரம்.. சென்னை கடற்கரை.. மாறிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளின் விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக எழும்பூருக்கு பதில் மாம்பலம், தாம்பரம், சென்னை கடற்கரைக்கு சில எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக, எழும்பூரில் இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள், மற்ற பகுதியில் இருந்து எழும்பூருக்கு வரும் சில எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செப்டம்பர் 1-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதன் விவரம் வருமாறு:-

Mambalam Tambaram and Chennai Beach instead of Egmore Changes to express train services

மன்னார்குடியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16180), வருகிற செப்டம்பர் 4-ந்தேதி முதல் அக்டோபர் 13-ந்தேதி வரை தாம்பரம் வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16179), அதற்கு பதிலாக வருகிற செப்டம்பர் 5-ந்தேதி முதல் அக்டோபர் 14-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு மன்னார்குடி செல்லும்.

சேலத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (22154), வருகிற செப்டம்பர் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையில் மாம்பலம் வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (22153), வருகிற செப்டம்பர் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும். இந்த ரயில் இரவு 11.55 மணிக்கு எழும்பூர் வந்து சில நிமிடம் நின்று செல்லும்.

திருச்சியில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (12654), வருகிற செப்டம்பர் 9 முதல் 15 மற்றும் 21 முதல் அக்டோபர் 14-ந்தேதி வரையில் சென்னை கடற்கரை வரையில் இயக்கப்படும்.

மும்பை ஜி.எஸ்.டி.யில் இருந்து இரவு 10.52 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (22157), வருகிற செப்டம்பர் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் (16866), வருகிற செப்டம்பர் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையில் மாம்பலம் அல்லது கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் 20 நிமிடமும், வருகிற செப்டம்பர் 22-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரையில் மாம்பலம் அல்லது கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் 30 நிமிடமும் நிறுத்தப்படும். அதன்பின், எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+