கலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆங்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மம்தா பானர்ஜியை வங்கத்து புலி என அழைத்தார். இதை கேட்டு மம்தா நெகிழ்ந்து சிரித்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். அமர்ந்த நிலையில் கருணாநிதி எழுதுவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது.

mamta banerjee is west bengal tiger: appreciated by puducherry chief minister narayanasamy

இந்த சிலை திறப்பு விழாவுக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராணசாமி பேசுகையில், "தமிழின தலைவர் கருணாநிதி. வாழ்நாள் முழுவதும் மாநில சுயாட்சிக்காக போராடியவர். தமிழ் மொழிக்காக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கட்டியவர். 5 முறை முதல்வராக இருந்தவர். 3 முறை எதிர்க்கட்சி தலைவர், எழுத்தாளர், என பன்முகத்தன்மை கொண்ட கருணாநிதியின் சிலை முரசொலி வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதியின் மகனாகிய ஸ்டாலின். தமிழகத்தின் வரலாற்றி எழுதி, நாளை நமதே நாற்பதும் நமத என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார். வேலூரையும் சேர்த்தே சொல்கிறேன். தேனி நாடாளுமன்ற தொகுதி வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கு முடிந்த பின் 40ம் நமதாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன்.

mamta banerjee is west bengal tiger: appreciated by puducherry chief minister narayanasamy

நாடாளுமன்றத்தில் எங்களோடு பணிபுரிந்த மேற்கு வங்கத்தின் பெண் சிங்கம் மம்தா பானர்ஜீ (அப்படியே மம்தாவை அழைத்து ஆங்கிலத்தில் நீங்கள் புலி என மக்களிடம் சொல்கிறேன் என்றார். அதற்கு மம்தா நெகிழ்ச்சி அடைந்து சிரிந்து கொண்டே இருந்தார்) இந்த நாட்டின் ஒற்றுமைக்காக, மதசார்பின்மையை பாதுகாப்பதற்காகவும் போராடி வருகிறார். மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிர்த்து போராடும் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். மாநில அந்தஸ்துடன் இருந்த ஜம்மு காஷ்மீருக்கு அந்தஅந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராட வேண்டிய கடமை மதசார்பற்ற அணியின் அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது என்பதை இந்த நேரத்திலே கூறிக்கொள்கிறேன்" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+