ரீல்ஸ் மோகத்தில் இப்படியா செய்வாங்க! பரவிய வீடியோ.. கொந்தளித்த நெட்டிசன்ஸ்! ஆர்பிஎஃப் அதிரடி ஆக்ஷன்
சென்னை: சமூக வலைத்தளங்களில் அதிக வியூஸ் பெறுவதற்காக ரயிலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்த முன்பின் தெரியாத பயணி ஒருவரை, ரயில் நிலைய பிளாட்பார்மில் நின்ற யூடியூபர் ஒருவர் அடித்துவிட்டு அதை வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ்களில் அதிக வியூஸ்களை பெற, விதவிதமான வீடியோக்களை போட்டு வருகிறார்கள். சோஷியல் மீடியாக்களில் பிரபலமாக இருக்கும் பலரும் இப்படி வீடியோக்கள் போடுவதை பார்க்க முடிகிறது. பல யூடியூபர்கள் ஆரோக்கிய தகவல்கள், பயனுள்ள கருத்துக்கள், நடனம் என தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களையும் வெகுவாக கவர்கிறார்கள்.

ரீல்ஸ் மோகத்தில் பயணிக்கு பளார் விட்ட யூடியூபர்
இதனால், சினிமா வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு கூட யூடியூபர்கள் சிலர் பிரபலமாக உள்ளனர். அதேவேளையில் சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆவதற்காக சிலர் வேண்டாத வேலைகளை பார்க்கிறார்கள். பொது இடங்களில் மற்றவர்களை துன்புறுத்தும் விதமாக ரீல்ஸ்களை எடுப்பது.. உயிரை பணயம் வைக்கும் விதமாக செயல்களில் ஈடுபடுவது, பைக் சாகசங்களில் ஈடுபட்டு அத்துமீறும் நிகழ்வுகளும் அரங்கேறுவதை பார்க்க முடிகிறது.
இதுபோன்ற சமயங்களில் சட்ட நடவடிக்கைகள் ஈடுபட்டாலும் கூட இன்னமும் ரீல்ஸ் மோகத்தில் பலரும் வீடியோக்களை இப்படி எடுப்பதை நிறுத்தியபாடில்லை. அந்த வகையில் தான் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அதில் ரயிலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருக்கும் பயணி ஒருவரை திடீரென்று கன்னத்தில் தாக்கிவிட்டு எதையோ சாதித்தது போல ஒய்யாரமாக இளைஞர் ஒருவர் நடந்து சென்றார்.

கொந்தளித்த நெட்டிசன்கள்
பயணியை அடித்துவிட்டு சிரித்தபடியே செல்லும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்று இருந்தது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவிய நிலையில், இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்தனர். இது என்னமாதிரியான மனநிலை.. ரீல்ஸ்க்காக இதுபோன்ற நடந்து கொள்பவர்களை மனநல மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டும் என சில நெட்டிசன்கள் கடுமையாக கொந்தளித்தனர். இன்னும் சில நெட்டிசன்களோ.. பயணியை அடித்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே போலீசாரை டேக் செய்தனர்.
No compromise on passenger security !!
— RPF INDIA (@RPF_INDIA) February 27, 2025
A YouTuber who slapped a passenger on a moving train for social media fame has been tracked & arrested by #RPF Dehri-on-Sone! pic.twitter.com/4KckhrCyPy
Your safety matters to us—reckless acts will not be tolerated.#PassengerSafety #RPFAction… pic.twitter.com/2h00IQPTKj
ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை
இதையடுத்து ரயில்வே போலீசார் இது குறித்து விசாரித்ததில், பயணியை அடித்த நபரின் பெயர் ரிதேஷ் குமார் என்பதை போலீசார் கண்டறிந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் யூடியூபில் வியூஸ் பெறுவதற்காக இப்படி நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் கூறுகையில், பயணிகள் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையின் போது தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ள ரிதேஷ்குமார், தனது தவறை உணர்ந்துவிட்டதாகவும் செயலுக்காக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். அனுரகா நாராயண சாலை ரயில்வே நிலையத்தில் இன்ஸ்டா ரீல்ஸில் வீடியோ போடுவதற்காக முன்பின் தெரியாத பயணியை அடித்ததாகவும், எனது தவறை நான் உணர்ந்து விட்டேன்.. என உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications