சென்னை முகலிவாக்கத்தில் பெண் மீது கொலை வெறித் தாக்குதல்.. முடியை இழுத்து எட்டி உதைத்த கொடூரம்
சென்னை: சென்னை முகலிவாக்கம் பகுதியில் பெண்கள் விடுதி நடத்தி வந்த நபர், பெண் உரிமையாளரை சரிமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகலிவாக்கம் கிருஷ்ணவேணி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி கணபதி ஜானகி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். கணபதி ஜானகி கடந்த 2013 ஆம் ஆண்டு முகலிவாக்கம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வந்தார்.

இந்த விடுதியில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர். கொரோனா காலத்தில் இவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த பரமசிவன் என்பவர் விடுதி நிர்வாகத்தை கவனித்து வந்தார்.
அவர் மீது நம்பிக்கை இருந்ததன் காரணமாக கணக்கு வழக்குகளையும் பரமசிவனிடம் கணபதி ஜானகி ஒப்படைத்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வரவு செலவு கணக்குகளில் ஏதோ பிரச்சினை இருப்பதை கணபதி ஜானகிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு தங்கியிருக்கும் பெண்களிடம் மாதா மாதம் வாடகை கொடுப்பது குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் நாங்கள் சரியாக கொடுத்துவிடுகிறோம். ஆனால் பரமசிவன் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியதால் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தியதாக அந்த பெண்கள் கூறினர். இதுகுறித்து பரமசிவனிடம் கணபதி ஜானகி கேட்டதற்கு இந்த விடுதியை நான்தான் நடத்துகிறேன். ஏதாவது பிரச்சினை செய்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கணபதி ஜானகி நேராக விடுதிக்கு சென்று பரமசிவனிடம் விசாரணை நடத்தினர். அதில் ஆத்திரமடைந்த பரமசிவன், கணபதி ஜானகியை கண்மூடித்தனமாக அடித்துள்ளார். அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீஸில் கணபதி ஜானகி புகார் அளித்தார்.
ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்தநிலையில்தான் பரமசிவன், கணபதி ஜானகியை தாக்கிய வீடியோ வெளியானது. அதில் பேசிக் கொண்டிருந்த போதே அந்த பெண் மீது பரமசிவன் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். அவரை சிலர் தடுக்கிறார்கள். ஆனாலும் விடாமல் அடிக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவருடைய அடி தாங்கமுடியாமல் அங்கிருந்த வெளியேற முயன்ற கணபதி ஜானகியின் முடியை பிடித்து இழுத்து எட்டி உதைத்து சோபாவில் தள்ளி தாக்குகிறார். நெஞ்சையே பதைபதைக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள பரமசிவனை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications