லுங்கியை கட்டி கொண்டே.. திடீரென லாரிக்கு அடியில் போய்.. போலீஸையே உறைய வைத்த நபர்..!
சென்னை: லுங்கியை கட்டி கொண்டே இருந்தவர், திடீரென லாரிக்கு அடியில் போய் தலையை வைத்து கொண்டார்.. இப்படி ஒரு சிசிடிவி காட்சியை பார்த்து போலீஸார் நடுநடுங்கி போய்விட்டனர்.
சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் ஒருவர் ரோட்டை கிராஸ் பண்ண முயன்றார்.. அப்போது திடீரென லாரி மோதி அவர் இறந்துவிட்டார்.. இதனால், கோயம்பேடு போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.. உடல் நசுங்கி கிடந்த அந்த சடலத்தையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு விசாரணையையும் ஆரம்பித்தனர்.. ஆனால் இறந்தவர் யார் என்பது உடனடியாக தெரியவில்லை.. அதனால் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் அந்த காட்சியை பார்த்து மிரண்டனர். அது விபத்தே இல்லை என்று தெரிந்தது.
இறந்து போன நபருக்கு 40 வயதிருக்கும்.. ரோட்டோரம் நின்று கொண்டிருக்கிறார்.. பிறகு தன்னுடைய லுங்கியை சரியாக கட்டுகிறார்.. இந்த பக்கமும், அந்த பக்கமும் செல்லும் வண்டிகளை நோட்டம் விட்டுக் கொண்டே இருக்கிறார்.. அங்கே ஒரு பெரிய லாரி வருகிறது.. அந்த லாரியை பார்த்ததுமே ரோட்டை கிராஸ் செய்து, அந்த லாரியின் டயர் முன்பு போய் படுத்து கொள்கிறார்.
வேகமாக வந்த அந்த லாரி, அவரது உடல், தலைமீது ஏறி இறங்கியது.. இதில் தலை நசுங்கி அங்கேயே அவர் இறந்துவிட்டார்.. இவ்வளவும் அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.
ஆனால், அவர் யார் என்று தெரியவில்லை.. எதற்காக ஓடும் லாரியில் தலையை வைத்து கொண்டார் என்றும் தெரியவில்லை.. விசாரணை நடந்து வருகிறது.. இந்த சிசிடிவி காட்சிகள்தான் இணையத்திலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications