நாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்!
மின்கம்பம் சரிந்து விழுந்து ஒருவர் பலியானார்.
Recommended Video
சென்னை: நாய்க்கு சாப்பாடு போட போனார் சேது.. அப்போது, மின்கம்பம் அப்படியே சரிந்து இவர் மீது விழுந்து.. மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேது ராஜன். இவருக்கு 42 வயதாகிறது. அதே பகுதியில் மினி ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் சப்ளை செய்து வருகிறார்.
கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். வழக்கமாக இரவு நேரங்களில் அங்குள்ள தெருநாய்களுக்கு சாப்பாடு வைப்பது வழக்கம். நேற்றிரவும் அப்படித்தான், சாப்பிட்டுவிட்டு, மீதமான சாப்பாட்டை எடுத்து கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார்.

சேதம்
அங்கிருந்த ஒரு சிமெண்ட் மின் கம்பத்தில்தான் நாய்க்கு வழக்கமாக சாப்பாடு வைக்கப்படும். அந்த கம்பமோ ரொம்ப காலமாகவே சேதமாகி இருந்திருக்கிறது. சேது சாப்பாட்டை வைத்த உடனேயே அந்த மின்கம்பம் திடீரென உடைந்து சரிந்தது.

உயிரிழந்தார்
இதில், மின் கம்பி சேது மீது அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தும், சேது பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட, அந்த பகுதி மக்கள் கொதித்து போய் உள்ளனர்.

ஆத்திரம்
இந்த மின்கம்பத்தை அகற்ற கோரி பலமுறை புகார் சொல்லியும், மின்வாரியம் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லையாம். மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் ஒரு உசுரு அநியாயமாக போய்விட்டதே என்று ஆத்திரத்துடன் சொல்கிறார்கள்.

அதிருப்தி
இப்படித்தான் போன ஞாயிற்றுக்கிழமை போரூர் அருகே 16 வயது சிறுவன் ரோட்டில் நடந்து செல்லும் போது, கீழே கிடந்த மின்கம்பியை மிதித்து அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டான். இப்போது அடுத்த சம்பவமும் நடந்துள்ளதால், சென்னை மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications