நெஞ்சை பதற வைக்கும் பச்சைப் படுகொலை.. நாய்க்குட்டியை அடித்தே கொன்ற கொடூரன்
கட்டையால் அடித்து தெரு நாய் ஒன்றினை நபர் ஒருவர் கொலை செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஒரு நாய் குட்டியை கட்டையாலேயே அடித்து கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரின் மனதையும் பதற வைத்துள்ளது. இவ்வளவு கொடூரமாக நாய்க்குட்டியை கொலை செய்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ப்ளூ கிராஸ் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஆவடி காமராஜர் நகர் 9-வது தெருவில் சுற்றித்திரிந்த ஒரு நாய் ஒன்று 8 குட்டிகளை ஈன்றது. இதனால் அந்த தெருவில் உள்ள மக்கள் நாயையும், குட்டிகளையும் ஆசை ஆசையாக பார்த்து சென்றனர்.
ஆனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகள் மர்மமான முறையில் இறந்துவிட்டன. இனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். நாய்க்குட்டிகள் இறப்பிற்கு காரணம் தெரியாமலேயே குழம்பி இருந்தனர்.

அலறி ஓடிவந்தனர்
இந்நிலையில் பால்ராஜ் என்பவரது வீட்டின் வாசலில் நாய் குட்டி ஒன்று கத்தும் சத்தம் கேட்டது. இதனால் அந்த குடும்பத்தினர் அலறி அடித்துகொண்டு வெளியே வந்தனர். அப்போது நாய் குட்டி ஒன்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கட்டையால் அடித்தார்
உடனே வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவர் அந்த நாய்க்குட்டியை துரத்தி துரத்தி வந்து கட்டையால் அடித்து கொலை செய்யும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. ராமு என்பவருக்கு வயது 50 இருக்கும் என கூறப்படுகிறது.

மர்ம மரணம்
ஏற்கனவே ஒரு வாரத்தில் 5-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகள் இறந்து வந்த நிலையில், இப்போது இந்த சிசிடிவி காட்சிகளை கண்டு மக்கள் கடுமையான ஆத்திரம் அடைந்தனர். நாய்க்குட்டி கொலை செய்யப்பட்டது குறித்து ப்ளு கிராசில் புகார் அளித்தனர்.

சிசிடிவி காட்சி
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ப்ளு கிராஸின் அமைப்பின் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் இறந்த நாய் குட்டி மற்றும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். ஆனால் நாய்க் குட்டியை கொலை செய்தவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

கைது செய்ய வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சொல்லும்போது, காமராஜர் நகர் 9-வது தெருவில் உள்ள நாய்க்குட்டிகளை ராமு என்பவர் கொலை செய்துள்ளார். புகாரை ஏற்று அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாய்க்குட்டியை கட்டையால் அடித்தே கொன்ற காட்சியை கண்ட அப்பகுதி மக்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை என கூறப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications