மானாமதுரையில் கேட்ட அந்த சத்தம்.. டக்குனு திரும்பி பார்த்த "மாமா" அண்ணாமலை.. வாவ், செம க்யூட் இல்லை?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது.. அந்த வீடியோவில் உள்ள குழந்தையும் பலரையும் கவர்ந்திழுத்து வருகிறது.
வழக்கமாக அரசியல் கட்சி தலைவர்களை உறவுமுறை சொல்லி யார் அழைத்தாலும் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.. அதிலும் மழலைகள் அவர்களை உறவுமுறையிட்டு அழைக்கும்போது, பலரையும் வெகுவாக ஈர்த்துவிடும்.
நேரு மாமா, காந்தி தாத்தாவில் ஆரம்பித்தது இன்று அண்ணாமலை மாமா வரை தொடர்கிறது.. சில நாட்களுக்கு முன்புகூட, அறிவாலயத்துக்கு முதல்வர் ஸ்டாலின் காரில் வந்து இறங்கினார்.

ஸ்டாலின் தாத்தா : அப்போது, அங்கிருந்த பெண் குழந்தை, உணர்ச்சி வசப்பட்டு ஸ்டாலினை பார்த்து, தாத்தா... தாத்தா... என்று பாசத்துடன் சத்தமாக அழைத்தது.. அந்த குரலை கேட்டதுமே, டக்கென திரும்பி பார்த்தார் ஸ்டாலின்..
உடனே தன்னுடைய பாதுகாவலர்களிடம், அந்த சிறுமியையும், பெற்றோரையும் அழைத்து வருமாறு சொன்னார்.. இதையடுத்து பாதுகாவலர்களும், அந்த சிறுமியையும், அவரது பெற்றோரையும், முதல்வரிடம் அழைத்து சென்றனர். அவர்களை நேரில் சந்தித்து நலம்விசாரித்த ஸ்டாலின், சிறுமியிடம் சிறிது நேரம் பேசிவிட்டுதான் அறிவாலயத்துக்குள்ளேயே நுழைந்தார்.
4 வயது குழந்தை: இப்படித்தான் 2 மாதத்துக்கு முன்புகூட, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், காலண்டரில் இடம்பெற்றிருந்த பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் போட்டோவை பார்த்து, ஒரு குழந்தை கொஞ்சி விளையாடி கொண்டிருந்தது.. மோடி தாத்தா, அண்ணாமலை மாமா என்று 4 வயது பேசியது, சமூக வலைதளங்களிலும் வைரலானது.
அண்ணாமலை மாமாவுக்கு போன் அடிக்கணும்.. வா, வா-ன்னு கூப்பிட்டுட்டு இருக்கேன்.. ஆனால் வரவே மாட்டேங்குறாரா மாமா என்று அந்த குழந்தையின் பேச்சு பலராலும் சுண்டி இழுக்கப்பட்டிருந்தது.
மோடி தாத்தா: நேற்றுகூட ஒரு சம்பவம் கோவை வடவெள்ளியில் நடந்தது.. ரவிசியாம் - சத்தியபிரியா தம்பதியினரின் ஒரு வயது குழந்தை பெயர் ஷன்மிதா.. மானாமதுரை அருகே உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர்.. தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை மேற்கொண்டிருந்ததால், அவரை சென்று சந்தித்து, வாழ்த்துக்களை சொன்னார்கள்..
அப்போது, ஒரு வயது குழந்தை ஷன்மிதா அண்ணாமலையிடம், மோடி தாத்தாவை எங்க வீட்டிக்கு வீட்டிற்கு கூட்டிகிட்டு வாங்க மாமா என்ற பாசத்தோடு கேட்டது. உடனே இதைக்கேட்ட அண்ணாமலை, நான் கோயம்புத்தூர் வரும்போது கண்டிப்பாக உங்க வீட்டுக்கு வருவேன்... பிரதமர் மோடியையும் கோவை வரும்போது, அழைத்து வருகிறேன் என்று அன்பாக கூறினார்.. இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அழகான உறவு: ஆயிரம் கொள்கை, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைவருமே நமக்கு அரசியல் கட்சி தலைவர்கள்தான்.. ஆனால், எந்தவிதமான பேதமும் இல்லாமல், குழந்தைகளுக்கு மட்டும் இவர்கள் இனிய உறவாகிப்போய்விடுகிறார்கள்.. அறுக்க முடியாத பந்தமாகி போய்விடுகிறார்கள்.. அதுதான் மழலையின் சக்தி..!!!












Click it and Unblock the Notifications