பணம் தேவையில்லை, மனு மட்டும் கொண்டு வாங்க! மானாமதுரை வட்டாட்சியர் ஒட்டிய நோட்டீசால் மக்கள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: லஞ்சம், ஊழலை தவிர்க்கும் வகையில், "மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்.. பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை" என மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் ஒட்டியிருந்த நோட்டிசால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது.

அரசு அலுவலங்களில் பட்டா மாறுதல், சான்றிதழ் வாங்குதல், நில அளவை உள்ளிட்ட பணிகளுக்கு சிலர் லஞ்சம் வாங்குவதாகவும், இடைத்தரர்கள் தலையீடு இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், தாலுகா ஆபீஸ் வருபவர்கள் கோரிக்கை மனுவுடன் மட்டுமே வர வேண்டும்.. பணத்துடன் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என நோட்டீஸ் ஒட்டியிருப்பது விழிப்புணர்வு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Manamadurai Taluk Office Notice Wins Public Praise Brings only Petition Not Money

முதல்வர் விஜய் பேச்சு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே லஞ்சம், ஊழலை ஒழிப்பதாக பேசி வந்தார். ஆட்சிக்கு வந்த பிறகும் சட்டசபையிலும், மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொடுபவர்களையும், தொட்டவர்களையும் விடமாட்டோம் என முதல்வர் விஜய் பேசினார்.

கரூரில் பேசும் போதும் மக்கள் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்றும் அப்படி லஞ்சம் கேட்பவர்களிடம் என் பெயரை சொல்லுங்கள் என்றும் கூறினார். இதனையடுத்து அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வந்தது. இதனால் ஜிபேயிலும் பணம் அனுப்ப முடியவில்லை.. கையிலும் பணம் வைத்திருக்க முடியவில்லை என அரசு ஊழியர்கள் ஒரு புறம் போராட்டமும் நடத்தி வந்தனர்.

வட்டாட்சியர் வைத்த நோட்டீஸ்

ஆனால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா ஆபிசில் வட்டாட்சியர் ஒருவர் ஒட்டியிருந்த நோட்டீஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தாலுகா அலுவலகத்தில் இப்படி ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

அந்த நோட்டீஸில், "தாலுகா அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வர வேண்டும்.. பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது" என கூறப்பட்டிருந்தது. முதல்வர் விஜய் லஞ்சம் வாங்கக் கூடாது.. கொடுக்கவும் கூடாது என பேசிய நிலையில் அதனை செயல்படுத்தும் விதமாக அரசு அதிகாரியே இப்படியொரு முன்னெடுப்பை செய்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குவியும் பாராட்டு

மேலும் வட்டாட்சியர் ஒட்டியிருந்த இந்த நோட்டீஸ் குறித்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி டிரெண்ட் ஆக பரவி வருகிறது. சமூக ஆர்வலர்கள் பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். பொதுமக்களும் இது வெறும் கண் துடைப்பாக இருந்துவிடாமல் நிஜமாகவே செயல்முறைக்கு வந்தால் மகிழ்ச்சி தான் என தெரிவித்து வருகின்றனர்.

அரசு அலுவலகம் வரும் பெரும்பாலானோர், பட்டா மாறுதல், சான்றிதழ்கள் பெறுவதற்கு, நிலஅளவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வருகை தருகின்றனர். இப்படி வரும் மக்களிடம் சிலர் லஞ்சம் எதிர்பார்ப்பதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் அடிக்கடி புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. புகார்கள் அதிகரித்து நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரவேற்கத் தக்கது

மானாமதுரை வட்டாட்சியிரின் இந்த நடவடிக்கை, லஞ்சத்துக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கை என்றும் இது பாராட்டுக்குரியது எனவும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சாமானிய மக்களுக்கு அரசு நிர்வாகம் மீது நம்பிக்கையை ஏற்படுத்த மேற்கொண்டிருக்கும் முயற்சி வரவேற்கத் தக்கது எனவும் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+