2021ல் 40 தொகுதில தோற்றீர்களே! அதைத்தான் நாங்கள் கேட்கிறோம்! திமுகவை விமர்சித்த மாணிக்கம் தாகூர்
சென்னை: 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 40 தொகுதிகளில் தோற்றீர்களே, அந்த இடங்களைத்தான் நாங்கள் கூடுதலாக கேட்கிறோம் என திமுகவை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2021 யில் 173 யில் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை முனிச்சாலை பகுதியில் மதுரை மாநகர் திமுக சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ராஜகண்ணப்பன் பேசுகையில் முதல்வர் தாய்மார்களை நம்பித்தான் தேர்தலில் போட்டியிடுகிறார்.
முதல்வர்
இப்போது பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க முதல்வர்தான் காரணம். நீங்கள் கொடுக்கும் பணம்தான் உங்களுக்கே திருப்பி வருகிறது. ஆட்சியில் பங்கு இல்லை என முதல்வரே சொல்லிவிட்டார். அதனால் கூட்டணி ஆட்சியை பற்றி பேச தேவையில்லை.
நாம் ஒரு சப்போர்ட்டுக்குத்தான் கூட்டணியை பற்றி பேசினோம். இப்போது அது தேவையில்லை. பாஜகவில் இருப்பவர்கள் அனைவருமே கிரிமினல்கள், வருமான வரித் துறையில் இருந்து பேசுகிறேன் என சொல்லி ஏமாற்றி காசு வாங்குகிறார்கள்.
கூட்டணி கட்சி
நமது கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் சாதாரணமானர்கள் அல்ல, வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. கூட்டணியை முதல்வர் அவமதிக்க மாட்டார். உதயசூரியன் என்றாலே எல்லோரும் ஓட்டு போடுவார்கள்.
கூட்டணி கட்சி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வேலை பார்க்க வேண்டும். கூட்டணி வேண்டாம் என சொல்வதற்கு எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அதை தலைவர்தான் முடிவு செய்வார். 96 இடங்களை வென்ற போது எல்லா கட்சிகளும் இருந்தார்கள். ஆனால் கருணாநிதி கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையே!
170 தொகுதிகள்
இந்தத் தேர்தலில் 170 தொகுதிகளில் போட்டியிடுவோம். 150 முதல் 160 தொகுதிகளில் உதயசூரியன் நிச்சயம் வெல்லும். இவ்வாறு ராஜகண்ணப்பன் பேசியிருந்தார். இவரது பேச்சுக்குத்தான் மாணிக்கம் தாகூர் ஒரு பதிவை போட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
மாணிக்கம் தாகூரின் பதிவுக்கு திமுகவினர் கொந்தளித்து பதிலடி கொடுத்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக மாணிக்கம் தாகூர் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழும் அளவுக்கு பேசி வருகிறார்.
25 தொகுதிகள்
தொடர்ந்து ஆட்சியில் பங்கு கேட்டு வருகிறார். அது போல் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளை கேட்டு வருகிறது. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் 18 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில் தற்போது 41 இடங்களை கேட்டு வருகிறது.
அத்துடன் கூட்டணி ஆட்சி குறித்தும் பேசி வருகிறது. என்னதான் கட்சி தலைமை பல்வேறு அறிவுரைகளையும் கண்டனங்களையும் மாணிக்கம் தாகூர் போன்றோருக்கு வழங்கினாலும் யாருமே கேட்டது போல் தெரியவில்லை.
ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் தமிழகத்தின் டிசைன் என திமுக மூத்த தலைவர்கள் சொன்ன போது "இதை முதல்வர் சொல்லட்டும்" என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்தனர்.
முதல்வர் திட்டவட்டம்
அண்மையில் இந்தியா டுடேவின் தேர்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார். எனினும் மாணிக்கம் தாகூர் அந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில்தான் மாணிக்கம் தாகூர், திமுகவின் செயல்திறனை சோதிப்பது போன்று ஒரு பதிலை அளித்துள்ளார். அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் மட்டுமேதானே வென்றீர்கள். 40 தொகுதிகளில் தோற்றீர்களே, அந்த 40 தொகுதிகளைத்தான் எங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டு வருகிறோம் என மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Election Exclusive: அன்னைக்கே சொன்னாரே அன்புமணி.. திமுகவில் சேலம் அருள்? ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை! அப்போ ராமதாஸ்? -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை?










Click it and Unblock the Notifications