காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்!
சென்னை: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பணியாற்ற கண்டிப்பாக நானும் வருவேன் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலான தேர்தல் பொறுப்புகளில் இருந்து மார்ச் 28ஆம் தேதியே விலகிவிட்டேன் என்றும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 21 நாட்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பாக இதுவரை வேட்பாளர்கள் பட்டியல் கூட வெளியிடப்படவில்லை. திமுக சார்பாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 28 தொகுதிகளால், காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் மையக்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி முன்னிலையிலேயே காரசார விவாதம் நடந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பணத்தை பெற்றுக் கொண்டு காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏ சீட் கொடுப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இதனிடையே நேற்று தமிழ்நாடு தேர்தல் பொறுப்பில் இருந்தும், ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பில் இருந்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விலகி இருப்பது தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலால் எழுந்த அதிருப்தியே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் மாணிக்கம் தாகூர், ஒரு குழப்பம் தேவையில்லாமல் பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியில் தேர்தல் சம்மந்தப்பட்ட மாநில அளவிலான பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த பொறுப்பில் தொடர விரும்பவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் கூறிவிட்டேன்.
மார்ச் 28ஆம் தேதி இதுதொடர்பாக கூறிவிட்டேன். அதனைப் பற்றி விவாதங்கள் தேவையில்லாதது. என்னை பொறுத்தரவரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற வேண்டும். அதற்காக எம்பி என்ற முறையில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பணியாற்றுவேன். நாடாளுமன்ற கொறடா பணி முடிவடைந்த பின் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவேன்.
மதுரையின் திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை தொகுதியில் என் உழைப்பு தொடரும். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தோழர்களுடன் இணைந்து பணியாற்றி 6க்கு 6 தொகுதிகளிலும் வெற்றிபெற வைப்பதற்காக நானும் வந்து சேர்வேன் என்று தெரிவித்துள்ளார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications