ஆட்சியில் பங்கு.. விடாமல் கேட்கும் மாணிக்கம் தாகூர்! சட்டென ஆர்.எஸ்.பாரதி கொடுத்த ரிப்ளை!
சென்னை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் அடம்பிடித்து வருகிறது. மாணிக்கம் தாகூர் இது குறித்து இன்று பதிவிட்டிருக்கும் ட்வீட் விவாதங்களை மீண்டும் தீவிரமாக்கியிருக்கிறது. இப்படி இருக்கையில், மாணிக்கம் தாகூருக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சொல்லியிருக்கும் பதில் கவனம் பெற்றிருக்கிறது.
எங்களுடன் கூட்டணி வைத்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று விஜய் பேசியிருந்தார். ஆனால், இப்போது வரை அவருடன் யாரும் கூட்டணி வைக்கவில்லை. மறுபுறம் அவர் சொல்லியிருந்த கருத்துக்கள் திமுக கூட்டணியில் புயலை கிளப்பியிருக்கிறது. காங்கிரஸ் பங்கு விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறது.

எனவே மாணிக்கம் தாகூரை வைத்து, திமுகவின் பல்லை பிடித்து பார்க்கிறது. மாணிக்கம் தாகூர் இதுவரை பேசியிருப்பது அனைத்தும் பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்னர், "மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006யில் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறு" என்று கூறியிருந்தார். 2006ல் திமுகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ் ஆதரவு கொடுத்து திமுகவை ஆட்சியில் அமர்த்தியது.
இதை நினைவுப்படுத்திய மாணிக்கம் தாகூர் இன்று, "2021ம் ஆண்டு 173ல் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்" என்று கூறியிருந்தார். இப்படியான கருத்துக்களை திமுக தலைவர்கள் பெரியதாக ரசிக்கவில்லை.
இப்படி இருக்கையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் பேசியதாவது, "இது குறித்து எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில்தான். ராகுல் காந்தி கேட்டால் பதில் சொல்வோம். மல்லிகார்ஜுன கார்கே அல்லது செல்வப்பெருந்தகை கேட்டால் பதில் சொல்வோம். ஆனால், எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தால் பதில் சொல்ல முடியாது.
கூட்டணி ஆட்சி குறித்து முதலமைச்சர் தெளிவாக சொல்லிவிட்டார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆட்சியில் பங்கு விஷயம் தொடர்பாக நாளை முதல் யாரும் பேச மாட்டார்கள்" என்று பதில் கொடுத்திருக்கிறார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications