முன்பதிவில் பட்டையை கிளப்பும் 'மங்காத்தா'! அஜித் ரசிகர்கள் வெறித்தனம்! ஜனநாயகன் இப்படி ஆயிடுச்சே!
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் தள்ளாடி வருகிறது. இந்நிலையில், திட்டமிட்டபடி, மங்காத்தா திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. முன்பதிவில் அஜித் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அஜித் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் மங்காத்தா. கடந்த 2011ல் இந்த திரைப்படம் வெளியானபோது மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக அஜித்தின் நெகட்டிவ் கேரக்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு திருப்தி கொடுத்திருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வருகிறது.

பொங்கலுக்கு சொன்ன படம்
முன்னதாக ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுத்தால்தான் படம் வெளியாகும். படத்தை பார்த்த சென்சார் போர்டு, ஏகப்பட்ட கட்களை சொன்னது. ஆனால், படக்குழு இதற்கு தயாராக இல்லை. எனவே தற்போது வரை சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருக்கிறது. இதனால் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொன்ன படம், இன்று வரை தியேட்டருக்கு வரவில்லை.
ஜனநாயகன் நிலைமை
எனவே, பொங்கல் ரேஸில் 'பராசக்தி' டப் பர்பாமென்ஸ் செய்தது. ஜனநாயகனுக்காக விஜய்யை தவிர எல்லோரும் குரல் கொடுத்திருந்தனர். குறிப்பாக காங்கிரஸ், ஜனநாயன் திரைப்படம் வெளியாகவில்லை எனில், சென்சார் போர்டே தேவையில்லை என்று கூறியிருந்தது. ராகுல் காந்தி கூட ட்வீட் செய்துவிட்டார். ஆனால், சென்சார் போர்டு மனம் வைக்கவில்லை. திரைப்படம் பொங்கல் முடிந்து வெளியாகும் என்றும் பேசப்பட்டது. ஆனால் இன்று வரை வெளியாகவில்லை.
பராசக்தி வேட்டை
பராசக்தி திரைப்படத்திற்கும் இதே போல சென்சார் பஞ்சாயத்து வந்தது. இதனால் சில சீன்களை வெட்டி எடுத்திருந்தது படக்குழு. இதனையடுத்து படம் வெளியாகியிருந்தது. இந்த சூழலில்தான் மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. விஜய்க்கு போக்கிரி எனில், அஜித்துக்கு மங்காத்தா! அந்த அளவுக்கு படம் தரமானதாக இருக்கும். முதல் பாதியில் காதல், குடும்பம், தொழில் என தொடங்கி, இரண்டாம் பாதியில் படம் சூடுபிடித்து, கிளைமேக்ஸில் பயங்கர ட்விஸ்ட் கொண்டிருக்கும். இந்த வித்தியாசமான திரைக்கதைக்கு இப்போது வரை மவுசு இருக்கிறது.
மங்காத்தா ரீ-ரிலீஸ்
ஜன.23ம் தேதி திரைப்படம் வெளியாகிறது. ஆனால், ரீ-ரிலீஸ் போல அல்லது.. சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட்கள் விற்று தீர்ந்திருக்கின்றன. குறிப்பாக சென்னை ரோகிணி தியேட்டரில், மொத்த ஸ்கிரினிலும் காலை 9 மணி ஷோவுக்கான டிக்கெட்டுகள் மொத்தமாக விற்று தீர்ந்திருக்கின்றன. மீதமிருக்கும் ஷோக்களுக்கு ஒன்றிரண்டு டிக்கெட்கள் மட்டுமே இருக்கின்றன.
ஏஜிஎஸ் மதுரவாயல், ஜிகே சினிமாஸ் போரூர், காசி தியேட்டர் அசோக் நகர், ஏஜிஎஸ் தி நகர் போன்ற தியேட்டர்களில் டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்று தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications