அற்புதமான மனிதர் + பொருளாதார சீர்த்திருத்தவாதி.. மன்மோகன் சிங்கை நினைத்து உருகிய ரஜினிகாந்த்
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அற்புதமான மனிதர். பெரிய பொருளாதார சீர்த்திருத்தவாதி என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் 2 முறை பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர். இவர் சீக்கிய மதத்தை சேர்ந்தவர். இதன்மூலம் இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெயரை பெற்றார்.

மன்மோகன் சிங் பொருளாதார மேதை. மத்திய நிதி அமைச்சராக செயல்பட்ட பிறகு தான் அவர் பிரதமராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். இந்தியாவின் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்ட பெருமைக்குரியவர்களில் மன்மோகன் சிங்கின் பெருமை அளப்பரியது.
கடந்த 1991-96 காலகட்டத்தில் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்தில் நாட்டின் நிதியமைச்சராக மன்மோகன் சிங் முக்கியத்துவம் பெற்றார், பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் பெரும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். இந்நிலையில் தான் மன்மோகன் சிங்கிற்கு 92 வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக வரும் உடல் உபாதைகளால் அவர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மன்மோகன் சிங் ஓய்வெடுத்தார். இதற்கிடையே தான் அவரது உடல்நலம் மோசமானது.
இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். மருத்துவமனையில் நேற்று இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. இரவு 10.30 மணிக்கு அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டது. உடல் உறுப்பு செயலிழப்பு மூச்சு விடுவதில் சிரமம், வயோதிகம் காரணமாக அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்பிறகு நாளை மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிசடங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மன்மோகன் சிங் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பிற துறையை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், மன்மோகன் சிங் பற்றி பெருமையாக கூறி இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது சென்னை விமான நிலையத்துக்கு இன்று வந்த ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர்கள் மன்மோகன் சிங் மறைவு பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு ரஜினிகாந்த், ‛‛அவர் ஒரு அற்புதமான மனிதர். பெரிய பொருளாதார சீர்த்திருத்தவாதி. பெரிய ஸ்டேட்ஸ்மேன் (ஸ்டேட்ஸ்மேன் என்றால் இந்த இடத்தில் அரசியல் சார்ந்த கொள்கையை வகுப்பதில் நிபுணர்). மன்மோகன் சிங் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று உருக்கமாக கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications