மந்திரியானார் 'மன்னார்குடி ராஜா' - தமிழ்நாடு அமைச்சரவையில் முதல் மாற்றம்- அமைச்சர் நாசர் நீக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அந்த துறை சிவசங்கரனுக்கு கொடுக்கப்பட்டது.

Tamilnadu cabinet shuffle Finance portfolio will be given to Thangam Thennarasu?

அதைத் தொடர்ந்து சிவசங்கரன் வசம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டது. அத்துடன் அண்மையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை வழங்கப்பட்டது. அப்போது சுற்றுலாத் துறை மற்றும் வனத் துறை அமைச்சர்களின் இலாக்கள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டது.

எந்த மாற்றம்: இதை தவிர்த்து தமிழக அமைச்சரவையில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த மாற்றமும் ஏற்படவில்லை. யாருடைய அமைச்சர் பதவியும் பறிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் சில மூத்த அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றவும் முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதிலும் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக உள்ள கயல்விழி செல்வராஜ், பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆகியோரின் இலாக்காக்கள் பறிக்கப்படுவதாக சொல்லப்பட்டன. அது போல் கடந்த முறை பெரிதும் எதிர்பார்த்த மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவுக்கு இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்க போகிறது என்றும் சொல்லப்பட்டது. டி.ஆர்.பி. ராஜா தற்போது திமுக ஐடி விங்கின் செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில் ஆடியோ சர்ச்சையில் சிக்கிய நிதியமைச்சர் பிடிஆரின் பதவி பறிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக சொல்லப்பட்டது. பிடிஆரின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக திமுகவுக்கு விசுவாசமாக இருந்து வருகிறது. அப்படியிருக்கும் போது பிடிஆரின் பதவியை பறிக்காமல் அவருடைய இலாக்காவை மாற்றலாம் என்ற யோசனையில் முதல்வர் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

Tamilnadu cabinet shuffle Finance portfolio will be given to Thangam Thennarasu?

பிடிஆருக்கு என்ன துறை: அதன்படி மனோ தங்கராஜிடம் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்படலாம் என்றனர். மேலும் பிடிஆர் வகித்து வந்த நிதித் துறை அமைச்சகம் தற்போது தொழில் துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று அதற்கான உத்தரவை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அது போல் தமிழக அமைச்சரவையிலிருந்து பால் வளத் துறை அமைச்சராக உள்ள நாசர் விடுவிக்கப்படுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக உள்ள கயல்விழியும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுகிறார் என சொல்லப்பட்ட நிலையில் அவர் நீக்கப்படவில்லை.

அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டு நாசர் நீக்கப்பட்டுள்ளார். மற்றபடி துறை ரீதியாக மாற்றங்கள், இலாகா மாற்றங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சராகும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பால்வளத் துறை கொடுக்கப்படுமா இல்லை ஏற்கெனவே ரெக்கை கட்டி பறந்தது போல் தொழில் துறை கொடுக்கப்படுமா என்பது இனிதான் தெரியும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+