மனநிறைவாக இருக்கு.. பதவி பறிப்புக்கு பின் மனோ தங்கராஜ் பரபர பதிவு.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
சென்னை: தமிழக அமைச்சரவை நேற்று இரவு மாற்றப்பட்டுள்ளது. இதில் மனோ தங்கராஜ் உள்பட 4 பேர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், பதவி பறிப்புக்கு பிறகு தனது எக்ஸ் தளத்தில் தான் செய்த பணிகளை பட்டியலிட்டு பதிவிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் பரவி வந்தது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும்.. ஏமாற்றம் இருக்காது என்று கூறியிருந்தார். இதற்கிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததது.

இதனால் தமிழக அமைச்சரவையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தான் நேற்று தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி, தற்போது அமைச்சர்களாக இருக்கும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு பதிலாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 6 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பதிவில், அமைச்சராக பதவி வகித்த போது தான் செய்த பணிகளை பட்டியலிட்டு மனநிறவை தருவதாக கூறியுள்ளார். மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
2021 - தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது. 2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது.
விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன்.
இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி!. மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications