தாஜ்மஹால் படத்தில்.. மனோஜோடு நடித்த அந்த ஹீரோயின் இப்போ என்ன பண்றாங்க தெரியுமா? ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று இரவு காலமானார். மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்த நடிகர், இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இவரின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.

இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறி உள்ளார்.

மனோஜோடு நடித்த அந்த ஹீரோயின் இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

இந்த நிலையில் தாஜ்மஹால் படத்தில்.. மனோஜோடு நடித்த அந்த ஹீரோயின் இப்போ என்ன பண்றாங்க என்று பலரும் இணையத்தில் தேட தொடங்கி உள்ளனர். வடஇந்திய முகத்தோடு நடித்த அந்த பெண்.. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இவரின் பெயர் ரியா சென்.

Manoj Bharathiraja Do you know what his first movie Taj Mahal lead actress Riya Sen doing now

ரியா சென் படத்திற்கு முன்பு இவர் பெயர் ரியா தேவ் வர்மா. ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். இந்தி, பெங்காலி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.

ரியா சென் சாதாரண குடும்ப பின்னணியை சேர்ந்தவர் கிடையாது.. வடகிழக்கில் உள்ள பூர்வீகரு அரச பின்னணியில் இருந்து வந்தவர். இவரது தந்தை பாரத் தேவ் வர்மா திரிபுராவின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கூச் பெஹாரின் இளவரசி இலா தேவியின் மகனும் ஜெய்ப்பூரின் மகாராணி காயத்ரி தேவியின் மருமகனும் ஆவார்.

சென்னின் தாயார் மூன் மூன் சென் மற்றும் பாட்டி சுசித்ரா சென் ஆகியோர் புகழ்பெற்ற மூத்த நடிகைகளாக இருந்தனர். ரியா சென் தாஜ்மஹாலுக்கு முன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது ஐந்து வயதில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவர் நடித்த தாஜ்மகால் படம் தோல்வியை தழுவினாலும் 2001 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படமான ஸ்டைலில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. அதன்பின் சில படங்களில் நடித்தவர் தற்போது பிஸ்னஸ் செய்கிறார். குடும்ப பிஸ்னஸ் தொடங்கி காஸ்மெட்டிக் பிஸ்னஸ் வரை பல பணிகளை செய்கிறார். அதோடு சில ஷட்டில் உள்ளிட்ட விளையாட்டுகளின் லீக் போட்டிகளுக்கான விளையாட்டு அணிகளின் ஓனராகவும் இருக்கிறார்.

சினிமாவில் பெரிய அளவில் இப்போது நடிப்பது இல்லை. பிஸ்னஸ், சமயங்களில் மாடலிங், விளையாட்டு என்று இவர் பிசியாக உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+