ஆலங்குளத்தில் பலத்தை மீண்டும் நிரூபித்த மனோஜ் பாண்டியன்.. தவெகவிற்கு 3-ம் இடம்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன் இரண்டாவது முறையாக வெற்றி பெற உள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் 24 சுற்று முடிவில், 60,769 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாவதாக கேஆர்பி பிரபாகரன் (அதிமுக) 54048 வாக்குகளும், விஜய்யின் விபின் சக்கரவர்த்தி 51,626 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஆலங்குளம் தொகுதியில் கடந்த முறை அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். ஓபிஎஸ் செயல்பாடு பிடிக்காமல் பிறகு திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த அவருக்கு மீண்டும் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.

ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தொகுதியில் தனது தனிப்பட்ட செல்வாக்கை மனோஜ் பாண்டியன் நிரூபித்துள்ளார். மனோஜ் பாண்டியன் முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியனின் மகன் அவார். நாடார் சமூக வாக்குகள் தொகுதியில் அதிகம் உள்ள இந்த தொகுதியில் மனோஜ் பாண்டியனுக்கு வெற்றி உறுதியாகியிருக்கிறது.
ஆலங்குளம் - 18 வது சுற்று
Admk - 49,072
Dmk- 53,372
Tvk - 47,040
NTk - 19062
ஆலங்குளம் 19 சுற்று முடிவு
Admk - 51,127
Dmk- 57,781
Tvk - 49 299
NTk - 19,594
ஆலங்குளம் - 21 வது சுற்று
Admk - 54,048
Dmk - 60,769
Tvk - 51,626
NTk - 20,363












Click it and Unblock the Notifications