கண்ணீர் வழிய தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்த மகள்கள்.. மனோஜ் உடலுக்கு கொள்ளி வைத்த சித்தப்பா மகன்!
சென்னை: மனோஜ் உடலுக்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜின் மகன் வினோத் கொள்ளி வைத்தார். தமது தந்தைக்கு மனோஜின் மகள்கள் கண்ணீர் மல்க கொள்ளிக்குடம் தூக்கி இறுதிச்சடங்கு செய்தனர்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா (48) நேற்று (மார்ச் 25) மாரடைப்பால் காலமானார். மாரடைப்பால் காலமான மனோஜ் பாரதிராஜாவின் உடல் நீலாங்கரை வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

'தாஜ்மஹால்', 'அல்லி அர்ஜூனா', 'வருஷமெல்லாம் வசந்தம்', 'விருமன்', 'மாநாடு' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் மனோஜ். இயக்குநர் பாரதிராஜாவின் மகனான இவருக்கு நடிப்பை விட இயக்குநர் ஆவதில் தான் விருப்பம் என பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் மனோஜ். பல படங்களில் நடித்த பின்பு ஷங்கரின் எந்திரன் படத்தில் மீண்டும் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார். மேலும் 2023ஆம் ஆண்டு சுசீந்திரன் கதையில் வெளியான 'மார்கழி திங்கள்' படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருந்தார். இப்படத்தில் தனது தந்தை பாரதிராஜாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இயக்கியிருந்தார்.
'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் 2 ஆம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்பது மனோஜின் ஆசை. ஆனால் அந்த ஆசை இறுதி வரை நிறைவேறவில்லை. 48 வயதான மனோஜுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. பின்னர் ஓய்வில் இருந்து வந்த மனோஜ் நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரும் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவரது உடல் நீலாங்கரை வீட்டில் இருந்து ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. மனோஜின் மகள்கள் அவருக்கு கொள்ளிக் குடம் தூக்கி இறுதிச் சடங்கு செய்தனர். ஆழ்ந்த சோகத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த பாரதிராஜாவை அவரது உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்ய வைத்தனர்.
இதையடுத்து மின் மயானத்தில், மனோஜ் உடலுக்கு, பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜின் மகன் வினோத் கொள்ளி வைக்க, மனோஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. அனைவரும் கூடி நின்று கண்ணீர் வழிய மனோஜுக்கு பிரியாவிடை அளித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications