"அடிமடியிலேயே".. மன்சூர் அலிகான் எடுத்த ரிஸ்க்.. குஷியில் போனை போட்ட செல்லபாண்டியன்..எல்லாம் மாறுமா?
சென்னை: நடிகர் மன்சூரலிகானுக்கு போனை போட்டு வாழ்த்து சொன்னாராம் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லபாண்டியன்.. என்ன காரணம் தெரியுமா? இதுகுறித்து நம்முடைய "ஒன் இந்தியா"விடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் செல்லபாண்டியன்.
பிரபல நடிகர் மன்சூர் அலிகான், வில்லன் கேரக்டரையும் தாண்டி, ஹீரோ, அரசியல்வாதி, காமெடி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பெற்றவர்.. தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் வைத்திருப்பவர். தற்போது சரக்கு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.. மதுவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த படத்தை மன்சூர் அலிகானே தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.. இதனை மூத்த டைரக்டர் கே.பாக்யராஜ் வெளியிட்டிருந்தார்..
மதுபானத்தை அடிப்படையாக, ஒரு புரட்சி படைப்பாக "சரக்கு" படத்தை மன்சூர் அலிகான் உருவாக்கியிருப்பதை, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வரவேற்றுள்ளது..
செல்லபாண்டி: விருதுநகர் மாவட்டம் கீழராஜ குலராமன் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி.. தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவராக உள்ளார்.. மதுவுக்கு எதிரான பிரச்சாரங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருபவர். கடந்த எம்பி தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியில் சேரும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவித்திருந்தது, அப்போது மிகப்பெரிய டிரெண்டிங் ஆனது..
அரசு டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகளை போதைப்பொருள் என்று நிரூபித்து கெஜட்டில் வெளியிட வைத்தால் ஒரு லட்சம் பரிசு தருவதாக அறிவித்திருந்ததும் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இச்சங்கத்தின் பெரும்பாலான கொள்கைகளை அடிப்படையாக வைத்தே, சரக்கு படம் உருவாகி உள்ள நிலையில், இதனை பெரிதும் வரவேற்று வாழ்த்து கூறியுள்ளார் சங்க தலைவர் செல்லபாண்டியன்.
இதற்காக நடிகர் மன்சூரலிகானுக்கு போனை போட்டு வாழ்த்து சொல்லி உள்ளார். அப்போது மன்சூரலிகான் செல்லபாண்டியனிடம் பேசும்போது, "உங்கள் சங்கத்தின் கருத்துக்களை மையமாக வைத்து, இந்த சரக்கு படம் எடுத்துள்ளோம்.. உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.. இந்த பட விழாவுக்கு உங்களை அழைத்து, மரியாதை செலுத்தவும் முடிவு செய்துள்ளோம்.. நீங்கள் அவசியம் வர வேண்டும்.
மனைவிகள்: மதுவுக்கு அடிமையாகி கணவன் உயிரிழந்துவிடும்நிலையில், அந்த குடும்பத்திலுள்ள மனைவிகளுக்கு அரசு சார்பில் வேலைவாய்ப்பு தர வேண்டும், குடிகார கணவனிடம் சிக்கி தவிக்கும், மனைவிகளுக்கு தியாகி பட்டம் தர வேண்டும் போன்ற விஷயங்களையெல்லாம் இந்த படத்தில் தெரிவித்துள்ளோம்..

நான் இதுவரை நடித்த படங்களில் சம்பாதித்த பணத்தையெல்லாம் கொட்டி, இந்த படத்தை எடுத்துள்ளேன்.. நல்ல நோக்கத்துக்காக பணத்தை செலவு செய்திருக்கிறேன்.. என் குடும்பத்தைகூட சரியா கவனிக்கல.. ஆனால், இந்த படத்தின்மூலம் என்னென்ன பிரச்சனை செய்ய போறாங்கன்னு தெரியல.. எதுவாக இருந்தால் என்ன? நான் சந்திக்காத பிரச்சனையா? ஆனால், பல குடும்பங்களை அழித்து வரும் இந்த மதுவுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்" என்றாராம் மன்சூரலிகான்.
பூரிப்பு: இதைக்கேட்டு பூரிப்படைந்த செல்லப்பாண்டியனும், "உங்கள் துணிச்சலுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.. இந்த சரக்கு படம் வெற்றியடைய வேண்டும்.. தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இந்த படம் சென்றடைய வேண்டும்.. இந்த படத்தின் மூலம், தமிழக குடும்பங்களில் ஒரு மாற்றம் வந்தால், அதைவிட வேறென்ன மகிழ்ச்சி நமக்கு இருந்துவிடப்போகிறது" என்று மன்சூரலிகானிடம் வாழ்த்து சொன்னாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications