விஜயகாந்த் பேரை எல்லாம் கெடுக்காதீங்க.. அவரை வெளியே வந்து பேச சொல்லுங்க பார்ப்போம்.. மன்சூர்
விஜயகாந்த்தை நடிகர் மன்சூர் அலிகான் புகழ்ந்து பேசி உள்ளார்
Recommended Video
சென்னை: "விஜயகாந்த் பேரை எல்லாம் கெடுக்காதீங்க.. அவர் இப்படியெல்லாம் பேச மாட்டார், எங்கே வெளியே வந்து அவரை நாலே நாலு வார்த்தை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்" என்று மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.
தன் கடினமான உழைப்பால் முன்னேறிய விஜயகாந்த், 32 இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர். நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் இருந்தது பொற்காலம் என்று பலர் இன்றும் சொல்லி வருகிறார்கள்.
எத்தனையோ நடிகர்களையும் அறிமுகம் செய்தவர்தான் விஜயகாந்த். அதில் ஒருவர் நடிகர் மன்சூரலிகானும் ஆவார். இன்று, அரசியல் ரீதியாக இருவரும் மாறுபட்டு உள்ளனர் என்றாலும், விஜயகாந்த் மீதான பாசத்தையும், நன்றியையும் இன்றும் மன்சூர் வைத்துள்ளார்.

நீட் தேர்வு
இந்நிலையில், விஜயகாந்த் நேற்று முன்தினம் நீட் தேர்வு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், மாணவர்களே விரும்பி நீட் தேர்வை ஏற்றுக்கொண்டிருக்கையில், அதனை அரசியலாக்க வேண்டாம் என்றும், ஒரே மாதிரியான மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு என்பது மாணவர்களின் கல்வித் தகுதியை மேலும் மேம்படுத்தும்" என்றும் தெரிவித்திருந்தார்.

அறிக்கை
அதாவது நீட் தேர்வை ஆதரித்து விஜயகாந்த் கருத்து சொல்லி இருந்தார். இதனை தமிழிசை சவுந்தராஜன் மட்டும்தான் வரவேற்றிருந்தாரே தவிர, விஜயகாந்த் பெயரில் வெளியான அந்த அறிக்கை பல தரப்பினருக்கு அதிர்ச்சியை தந்தது. இது சம்பந்தமான மன்சூரலிகானிடம் பிரபல நாளிதழான நக்கீரன் சார்பில் கருத்துகேட்கப்பட்டது. அப்போது நக்கீரனுக்கு மன்சூர் அளித்த பதில்தான் இது:

கெடுக்காதீங்க
"விஜயகாந்த் எதுக்கு நீட்டை ஆதரிக்கிறார்? அவர் எத்தனை படம் எடுத்திருக்கிறார்? அவர் படமெல்லாம் பாத்தீங்க இல்லை? அவர் இந்த மாதிரி திட்டத்தையெல்லாம் ஆதரிக்கிறவரா? விஜயகாந்த்தின் நல்ல பெயரை கெடுக்காதீங்க. என்னைப்போல நூற்றுக்கணக்கான கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

விரட்டுவோம்
ஏராளமான சாதனைகள் செய்திருக்கிறார். ஏழைகள் பக்கம் நின்ன மனுஷன் அவர். அப்படிப்பட்ட விஜயகாந்த் இப்படி பேசுவாரா? வெளியே வந்து அவரை நாலே நாலு வார்த்தை சொல்ல சொல்லுங்க. நீட் தேர்வு அரசியல் இல்லாம வேற என்ன? நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் நீட்டை விரட்டுவோம்" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications