"மோடியை திட்டுறேன்.. கோபம் வரலியா பேரரசு.." பக்கத்தில் உட்கார்ந்தபடி.. பதறவிட்ட மன்சூர் அலிகான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது முற்றிலும் தவறு என பாஜக நிர்வாகியும் இயக்குநருமான பேரரசுவுடன் பிரஸ்மீட் ஒன்றில் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

Recommended Video

    இயக்குநர் பேரரசு முன்பே பிரதமரை விமர்சித்த மன்சூர் அலிகான் - வீடியோ

    அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்த்தால் அம்பேத்கர் மிகவும் பெருமை கொள்வார் என எழுதியிருந்தார்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். திரைத்துறையினரும் சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.

    பிரஸ்மீட்

    பிரஸ்மீட்

    இதுகுறித்து ஒரு பிரஸ்மீட்டில் மன்சூர் அலிகான் பேசுகையில் அம்பேத்கருடன் மோடியை இளையராஜா ஒப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் தவறு இல்லையா. தப்பு தப்பு இப்படியெல்லாம் பேசக் கூடாது. பக்கத்துலயே இயக்குநர் பேரரசு (பாஜக நிர்வாகி) இருக்காரு, இவர் இப்போ மறுப்பு சொல்வாரு!

    சினிமா

    சினிமா

    நாங்கள் சினிமாவில் எல்லாரும் ஒன்றாகத்தான் இருப்போம். அரசியல் என வரும் போது விமர்சித்தாலும் அதுகுறித்து கண்டுக் கொள்ள மாட்டோம். இயக்குநர் பேரரசு மிகப் பெரிய பாடலாசிரியர். நீங்கள் பேசுங்கள் பேரரசு என்றார். அதற்கு பேரரசு நான் ஏற்கெனவே பேசிவிட்டேன். இதுக்கப்புறம் என்ன பேசுறது? என்கிறார்.

    மன்சூர் அலிகான் தில்

    மன்சூர் அலிகான் தில்

    அதற்கு மன்சூர் நான் மோடியை திட்டியுள்ளேன், உங்களுக்கு கோபம் வர வேண்டாமா? என்றார் மன்சூர். அதற்கு பேரரசு அதை வெளியே காட்ட மாட்டோம் என்றார். உடனே மன்சூர், பேரரசுவுக்கு வாழ்த்துகள். அடுத்த முறை இவர் பெரிய படம் செய்ய வேண்டும். இவரை ஏன் இந்த திரைத்துறை பயன்படுத்திக்காம இருக்கிறது என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றார் மன்சூர் அலிகான்.

     இயக்குநர் பேரரசு கருத்து

    இயக்குநர் பேரரசு கருத்து

    பாஜகவை சேர்ந்த பேரரசு அண்மையில் கூறுகையில் பிரதமர் மோடியை இன்னொருத்தரோட ஒப்பிட்டிருக்க வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்க தேவர்தான் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்றார். மோடிக்கு தேசியமும் இருக்கு, ஆன்மீகமும் இருக்கிறது. உண்மையில் ஒப்பிடுவதாக இருந்தால் மோடியை முத்துராமலிங்க தேவருடன் ஒப்பிட்டிருக்க வேண்டும் என பேசியிருந்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+