மன்சூர் அலிகான் திருந்தலையே.. த்ரிஷாவிடம் தப்பான வீடியோவை காட்டிட்டாங்களாம்! பருப்பு வேகாது என பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்து இருக்கும் நிலையில், அதுபற்றி தற்போது அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து அருவருப்பான கருத்தை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட நடிகை த்ரிஷா, "மனித குலத்திற்கே இவர் போன்ற நபர்களால் அவப்பெயர். திரையுலகின் இவருடன் சேர்ந்து இனி நடிக்க மாட்டேன்." என தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Mansoor Alikhan has given an explanation about Trisha speech

இதுகுறித்து விளக்கம் அளித்து உள்ளார் மன்சூர் அலிகான். அதில், "அய்யா பெரியோர்களே. திடிர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன்.

Mansoor Alikhan has given an explanation about Trisha speech

அனுமாரு சஞ்சீவி மலைய கையிலேயே தாங்கிகிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டி போயிட்டு வானத்திலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா. திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் MLA. M.P. மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள்.

Mansoor Alikhan has given an explanation about Trisha speech

பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும், லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN ணுன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும் 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறவன் என்று எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கன்னு தெரியுது உலகத்துல எத்தனையோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா.... நன்றி!" என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+