நொறுங்கிப் போய்ட்டாரே மனுஷன்! விஜயகாந்த் காலடியிலேயே காலை முதல் தவம் கிடக்கும் மன்சூர் அலிகான்!
சென்னை: விஜயகாந்த் உடலை விட்டு இம்மியும் நகராமல் காலடியிலேயே அமர்ந்திருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான். இன்று காலை முதல் விஜயகாந்த் உடலுக்கு அருகிலேயே தவமாய்க் கிடக்கிறார் மன்சூர் அலிகான்.
நடிகர் விஜயகாந்த் ஏராளமான புதிய இயக்குநர்களையும், நடிகர்களையும் திரைத்துறையில் அறிமுகப்படுத்தி வளர்த்து விட்டுள்ளார். அந்தவகையில், மன்சூர் அலிகானை பெரிய நடிகர் ஆக்கியதில் விஜயகாந்த்தின் பங்கு அளப்பரியது. விஜயகாந்த் படத்தில் மன்சூர் அலிகானின் சண்டைக் காட்சிகள் பிரபலமானதன் காரணமாகவே மன்சூர் அலிகான் பெரிய கவனிப்பைப் பெற்றார்.

கூட்டத்தில் ஒரு நடன நடிகராகவும், சண்டை நடிகராகவும் இருந்த மன்சூர் அலிகானை நடிகர் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். அப்படத்தில் அசத்தலான வில்லத்தன நடிப்பை வழங்கி ரசிகர்களை கவனிக்க வைத்தார் மன்சூர் அலிகான். தனக்கு வாழ்வு கொடுத்தவர் என்பதால் விஜயகாந்த் மீது மன்சூர் அலிகானுக்கு எப்போதும் ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு.
இந்நிலையில் தான் இன்று விஜயகாந்த்தின் மரணச் செய்தி கேட்டு நொறுங்கிப் போயுள்ளார் மன்சூர் அலிகான். விஜயகாந்த் இறந்த தகவல் தெரிந்ததுமே, நடந்தே விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றார். விஜயகாந்த் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது முதல் அவரது உடல் அருகிலேயே இருந்தார்.
விஜயகாந்த் வீட்டில் இருந்து கட்சி அலுவலகத்திற்கு, விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொதுமக்களுடன் சேர்ந்து கண் கலங்கியபடி நடந்தே சென்றார் மன்சூர் அலிகான். தேமுதிக அலுவலகத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல் உள்ள பெட்டியின் அருகிலேயே கொஞ்சமும் இம்மி கூட நகராமல் இருந்து வருகிறார் மன்சூர் அலிகான். விஜயகாந்த் காலடியிலேயே இருந்து வருகிறார் மன்சூர் அலிகான்.
காலை முதல் எங்கும் நகராமல், விஜயகாந்த் உடலுக்கு அருகிலேயே இருந்து வருகிறார் மன்சூர் அலிகான். திரையுலகில் எவரையும் விட தான் அதிகம் நேசிக்கும், மதிக்கும் கேப்டன் விஜயகாந்த்தின் இறப்பால் கலங்கிப் போயுள்ள மன்சூர் அலிகானின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.
அண்மையில் விஜயகாந்த், உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உருக்கமான அறிக்கையை வெளியிட்டிருந்தார் மன்சூர் அலிகான். அதில், "அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!! கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது, பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே! அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்?

மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே! நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து. ஓடி. ஆடி... உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு. கருப்பு எம்.ஜி.ஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே! மக்களோடுதான் கூட்டணி என்றாய்! எங்கள் மாநகர காவலனே, பூந்தோட்ட காவல்காரனே. வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு!!
கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் இப்ராஹிம் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிக, ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா... 100வது படம் எந்த நாயகர்களுக்கும் ஓடியதில்லை: தாங்களது 100வது படத்தில் முதல் வாய்ப்பளித்து வெற்றி திருமகளை மாலையிட வைத்த பிரபாகரனே... வாழிய வாழிய நூறாண்டு'!! தாங்களிடம் அடிவாங்க காத்திருக்கும் தம்பி மன்சூர் அலிகான்!" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications