தொடையில் கரும்பை அசால்டாக உடைத்து... பொங்கல் கொண்டாடிய மன்சூர் அலிகான்
திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் குழந்தைகள், பொதுமக்களுடன் சேர்ந்து ஆடல், பாலுடன் பொங்கல் கொண்டாடினார்.
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் இன்று பம்மலில் குழந்தைகள் பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடினார். ஆடல், பாடல் என்று அமர்களப்படுத்திய மன்சூர் அலிகான், முழு கரும்பை தனது தொடையில் உடைத்து குழந்தைகளுக்கு கொடுத்து குஷிப் படுத்தினார்.
Recommended Video
தமிழர் திருநாளாம பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் மாட்டுப்பொங்கலும், சனிக்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பல்லாவரத்தை அடுத்த பம்மல், திருவள்ளுவர் தெருவில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியினை பம்மல் ஏ.கே.சி நண்பர்கள், டாக்டர்.அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம், சிலம்பம் குழு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் மன்சூர்அலிகான் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினார்.

விழாவிற்கு வந்த மன்சூர் அலிகானுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு கொடுத்தனர். தை பொங்கலும் வந்தது பாடலுக்கு நடனமாடி எல்லோரையும் மகிழ்வித்தார் மன்சூர் அலிகான். குழந்தைகளுடன் நடனமாடிய மன்சூர் அலிகான் ஒரு முழு கரும்பை அசால்டாக உடைத்து குழந்தைகளுக்கு கொடுத்து குஷிப்படுத்தினார். பொங்கல் பானையை கிண்டி விட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் மன்சூர்அலிகான் டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொரோனாவினால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் அவர்கள் மீது மீண்டும் ஒரு சுமையாக சமையல் கேஸ் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுகிறது. தங்கம் விலை உயர்வு, உயர்ந்து வரும் தங்கம் விலையால் ஏழை பெண்களின் திருமணம் கனவாக உள்ளது என குற்றம் சாட்டினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications