காவிரில தண்ணீர் தரலை.. ஆனா ஒரே நாடு.. ஒரே வெங்காயம்னு எதுக்கு பேசறீங்க.. மன்சூர் அலிகான் கேள்வி
சென்னை: ஒரே நாடு ஒரே வெங்காயம்னு எதுக்கு பேசுறீங்க, காவிரி விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகா- தமிழகம் இடையே காவிரி பிரச்சினை என்பது நீண்ட காலமாக பூதாகரமாக வெடித்து வரும் பிரச்சினையாகும். இதற்கு தீர்வு ஏற்படாமல் இருந்து வருகிறது.

இந்த பிரச்சினையை தீர்க்கத்தான் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் கதவுகளை இரு மாநில அரசுகளும் தட்டாத நாடுகள் இல்லை என சொல்லலாம். தமிழகத்தில் மழையின் அலவு குறைந்து பயிர்கள் வாடி வதங்கும் போது தமிழகம் கர்நாடகாவுக்கு கோரிக்கை வைத்து வருகிறது.
தமிழகத்திற்கு காவிரி நீரை தரக் கூடாது என கன்னட விவசாயிகள் சில கன்னட அமைப்புகளுடன் நிற்கிறார்கள். காவிரி விஷயத்தில் வாய் திறக்காத அரசியல்வாதிகளே இல்லை என சொல்லலாம். மேலும் பிரபலங்களும் கருத்துகளை கூறி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் சிவாஜி கணேசனின் 96ஆவது பிறந்தநாளையொட்டி அவரது நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், சிவாஜி குடும்பத்தினர் என நேரில் சென்று சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அது போல் நடிகர் மன்சூர் அலிகான் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்திருந்தார். அப்போது காவிரி குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் மன்சூரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் ஏன் உங்கள் நிலைப்பாடு என்ன என திருப்பி கேட்டார். பின்னர் அவர் பேசுகையில் தண்ணீர் என்பது உலகப் பொதுமறை. உயரமான இடத்தில் பிறக்கும் தண்ணீர் கடைசியில் கடலில் போய் கலக்கிறது. அதை வைத்து அரசியல் செய்வது
அயோக்கியத்தனம் , மடத்தனம், முட்டாள்தனம். இதை எல்லாருமே செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு விஷயம். நீங்கள் போய் ஒரு ஹெலிகாப்டரை எடுத்துக் கொண்டு பார்த்தால் தெரியும். கர்நாடகாவில் அனைத்து அணைகளும் தகதகனு மின்னுது, ஏன் தெரியுமா, தண்ணீர் நிரம்பி இருக்கு. ஒரு டேம் மட்டும் இல்லை, எல்லா டேம்களிலும் தண்ணீர் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரு சொட்டு கூட கொடுக்க மாட்டேங்குறாங்க. அப்பறம் எதுக்கு ஏக இந்தியா, அதென்ன அது ஒரே நாடு ஒரே வெங்காயம்னு எதுக்கு பேசுறீங்க. ஆளை விடுங்க என கூறிவிட்டு மன்சூர் அலிகான் புறப்பட்டு சென்றார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications