விஜய் இல்லைன்னா.. எங்களுக்கு சீட்டே வேண்டாம்.. போட்டியிட முடியாது! அதிமுக தலைகள் போர்க்கொடி?
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி அமைக்கப்படாவிட்டால், பல அதிமுக தலைவர்கள் போட்டியிடத் தயங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய கூட்டணி எல்லாம் இல்லாமல் நாங்கள் போட்டியிட ரெடியாக இல்லை என்று பலர் எடப்பாடிக்கு தகவல் அனுப்ப தொடங்கி உள்ளார்களாம்.
கட்சியின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற ஒரு முக்கிய கூட்டாளி இல்லாமல், அதிமுகவின் வெற்றி வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் என்று மாவட்ட அளவிலான மற்றும் உள்ளூர் தலைவர்கள் பலர் கருதுகின்றனர்.

தவெக விஜய் - அதிமுக கூட்டணி
விஜய் அரசியலுக்கு வந்திருப்பது மாநில அரசியல் களத்தை மாற்றிவிட்டதாக இந்த தலைவர்கள் உணர்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பல தொகுதிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்காத பட்சத்தில், அதிமுக பல முக்கிய தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும், திமுக கூட்டணியை அதிமுக கூட்டணி எதிர்த்துப் போட்டியிடுவது கடினம் என்றும் அஞ்சப்படுகிறது. இதற்கு தவெகவின் வசீகரம் தேவை.
செலவு செய்ய விரும்பவில்லை
வெற்றி வாய்ப்புகள் குறைவாக இருக்கும்போது தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெரும் தொகையைச் செலவிடுவதில் சில உள்ளூர் நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். வெற்றிக்கு தெளிவான பாதை இல்லாதபோது நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்வது வீண் என்று அவர்கள் கருதுகின்றனர்.
தேர்தல்களில் தோல்வியடைவது, உள்ளூர் செல்வாக்கையும் அரசியல் பிம்பத்தையும் பலவீனப்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். ஏனென்றால் விஜய் வாக்குகளை பிரிப்பதால் சில அதிமுக தலைகள் 3ம் இடத்திற்கு கூட செல்ல நேரிடும். அதிமுகவின் கூட்டணி திட்டங்கள் குறித்து தெளிவு இல்லாத நிலையில், இந்த உணர்வு அதிகரித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் பேச்சுவார்த்தை
எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தேர்தல் உத்தியை இறுதி செய்வதற்கு முன் தமிழக வெற்றிக் கழகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல அடிமட்டத் தொண்டர்கள் இப்போது நம்புகின்றனர். இந்தக் கூட்டணி அமையாத பட்சத்தில், அதிமுக உள் கட்சி அழுத்தம் மற்றும் தொண்டர்களிடையே ஊக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். இது அதன் பிரச்சார வலிமையை மேலும் பாதிக்கலாம்.
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிற கட்சிகளுக்கு இடையேயான அரசியல் சமன்பாடு தமிழ்நாட்டின் எதிர்கால எதிர்க்கட்சி அரசியலைத் தீர்மானிக்கும் என்பதால், அடுத்த சில மாதங்கள் கட்சியின் முடிவுகளுக்கு முக்கியமானதாக இருக்கும்.
விஜய் முடிவு
தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026 சட்டசபை தேர்தலை தனியாக எதிர்கொள்ள.. தனியாக கூட்டணி அமைத்து சந்திக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு தேர்தல் நேரத்தில் மாறலாம். தேர்தலுக்கு இன்னமும் 6 மாதம் இருக்கிறது. அதற்குள் பல மாற்றங்கள் ஏற்படலாம்.
ஆனால் இப்போதைக்கு விஜய் தனியாக இருக்கிறார். ஏனென்றால் அவரின் கட்சியில் கூட்டணி எதுவும் இல்லை. இப்போதைக்கு அதிமுக கூட்டணியும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். வெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தவெகவின் இந்த முடிவு அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications