Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அறிவாலயம் செல்ல முடிவு செய்ததும்! அதிகாலை 5 மணி முதல் போன் மேல் போன்..! ஓபிஎஸ் சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று திமுகவில் நான் இணைய போவதை அறிந்து காலை 5 மணி முதலே எனக்கு பலரும் போன் செய்து, எனது முடிவு குறித்து கருத்துகளை சொன்னார்கள் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், இத்தனை ஆண்டுகளாக மீண்டும் அதே கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வார்கள் என இலவு காத்தக் கிளியாக காத்திருந்தார். ஆனால் அவர் எப்படியோ முட்டி மோதியும் அது நடக்கவில்லை.

ops dmk

இந்த நிலையில் தனது மகன், ஆதரவாளர்களின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அண்ணா அறிவாலயத்திற்கு ஓபிஎஸ் சென்றார். அங்கு அவரை மூத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, எம்பி தங்கத்தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் அழைத்துச் சென்றிருந்தனர்.

உள்ளே திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறைக்கு சென்றதும், அவர் ஓபிஎஸ்ஸை ஆரத்தழுவிக் கொண்டார். பின்னர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்.

இதையடுத்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தாய்க் கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு இணைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை இணைத்துக் கொண்டுள்ள திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலினுக்கு எனது முதல் நன்றியும் வணக்கத்தையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

பண்பு கொண்ட முதல்வர்

அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற ஒரு அரசியல் பண்பாடோடு முதல்வர் ஸ்டாலின், கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நான் நன்றாகவே உணர்ந்து திமுகவில் பெருமகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்.

சர்வாதிகாரி எடப்பாடி

அரசியலில் இன்றைக்கு ஒரு சர்வாதிகாரியாக, ஆணவப்போக்கோடு நடந்து கொள்கின்ற எடப்பாடி, எந்தக் காலத்திலும் இனி அரசியலில் வெற்றி பெற முடியாத ஒரு சூழ்நிலையை அண்ணா திமுகவிற்கு உருவாக்கியிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால், அதிமுக தொண்டர்கள், இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையை ஏற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு ஸ்டாலினை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

5 ஆண்டு காலம் முதல்வர்

கடந்த 5 ஆண்டு காலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அனைத்து நிலைகளிலும், அனைத்துத் துறைகளிலும் ஒரு சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிற நோக்கத்தோடு ஸ்டாலின் ஒரு நல்ல ஆட்சி, சிறந்த ஆட்சி, சீர்மிக்க ஆட்சியை தமிழக மக்களுக்குத் தந்து கொண்டிருக்கிறார்.

அண்ணாவின் அரவணைப்பு

சட்டசபை வரலாற்றில் பேரறிஞர் அண்ணா எப்படி அனைத்துக் கட்சிகளையும் அரவணைப்போடு நடத்தினாரோ, அதேபோல முதல்வர் ஸ்டாலினும் சட்டமன்றத்தில் தாய் உள்ளத்தோடு அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சமபங்கான பேசுகின்ற உரிமையைத் தந்து, அவர்கள் கருத்துக்களை உன்னிப்பாகக் கவனித்து அதற்குத் தக்க பதிலை அவர்கள் தருகின்ற பாங்கு இன்றைக்கு தமிழக மக்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

தற்காலிக பொதுச் செயலாளர்

அதிமுக-வை இன்றைக்கு பொறுப்பிலே இருக்கின்ற தற்காலிக பொதுச்செயலாளராக சர்வாதிகாரத்தனமாக வீற்றிருக்கின்ற எடப்பாடி பழனிசாமி, அவர் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை அக்கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு அத்தனை அண்ணா திமுக தொண்டர்களும் மிகுந்த வருத்தத்தோடு உள்ளனர். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இயக்கத்துக்கு நானும் ஒரு துணையாக இருந்து இயக்க வளர்ச்சிக்கு முழுமையாகப் பாடுபடுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கட்டாயமா

அப்போது அவரிடம் "உங்களை யாராவது கட்டாயப்படுத்தி திமுகவில் இணைத்தார்களா" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு ஓபிஎஸ், "யாரும் கட்டாயப்படுத்தவில்லை. என் சுய விருப்பத்தின் பேரில் திமுகவில் இணைந்துள்ளேன். நான் இன்று திமுகவில் இணைய போவது தெரிந்து எனக்கு அதிகாலை 5 மணி முதல் நிறைய பேர் போன் செய்து வாழ்த்தினார்கள். சரியான முடிவை எடுத்துள்ளீர்கள் என பாராட்டினார்கள். இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+