Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்தி, ஜோதிமணி! அடுத்தடுத்து விஜய்க்கு ஆதரவாக வந்த காங். தலைகள்! திமுகவிற்கு சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக சீண்டி பார்க்க தொடங்கி உள்ளது. விஜயின் தவெக உடன் நெருக்கமாவது போன்ற தோற்றத்தை, பிம்பத்தை காங்கிரஸ் ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இது திமுகவிற்கு நெருக்கடியை கொடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

விஜய்-ராகுல் பேசியது உண்மை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய், ராகுல் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. சில வருடங்களுக்கு முன் காங். இளைஞர் அணி தலைவராக வர விஜய் விருப்பப்பட்டார். விஜய்க்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும்; வாக்குகள் வெற்றியாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார், என்று கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார்.

congress

ஜோதிமணி

இன்னொரு பக்கம் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, விஜய் ஒன்றும் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல. 2010ஆம் ஆண்டு ராகுலை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார். விஜய் புதியவர் அல்ல அந்த இணைப்பு என்பது பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை. எனவே விஜய் ஒன்றும் எங்களுக்கு தெரியாதவர் அல்ல.

கரூர் கூட்ட நெரிசல் போன்ற துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடக்கும் போது தலைவர்கள் பேசுவது இயல்புதான். ஆனால் அதையே தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக சொல்லிவிட முடியாது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீண்ட காலமாக இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே சமூகவலைதளங்களில் வருவதெல்லாம் அரசியல் கட்சிகளின் முடிவு என நாம் நினைக்கக் கூடாது. இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

சீண்டும் காங்கிரஸ்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணிக் கட்சியான திமுகவிடம் அதிக இடங்களைப் பெற முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி குறித்த தகவல்களைப் பரப்புவது போன்ற வியூகங்களை பயன்படுத்தி, திமுகவிடம் அதிக இடங்களை கேட்கலாம் என்று காங்கிரஸ் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக, காங்கிரஸ் மற்றும் TVK இடையே கூட்டணி அமையலாம் என சமூக வலைத்தளங்களிலும், சில அரசியல் விமர்சகர்கள் மூலமாகவும் செய்திகள் பரவி வருகின்றன. காங்கிரஸ் - விஜய் பேசி வருகின்றனர்.. விஜய் ராகுல் காந்தியை சந்திக்க போகிறார்.. விரைவில் பேச்சுவார்த்தை நடக்க போகிறது.. என்றெல்லாம் செய்திகள் வருகின்றன,

கடந்த 24 மணி நேரமாக விஜய் - காங்கிரஸ் கட்சி உடன் ஆலோசனை செய்ததாக பல செய்திகள் வந்தன. தவெக கட்சி காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களை கொடுக்க முன் வந்ததாக செய்திகள் வந்தன. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவும் தவெக விஜய் முன்வந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் 70 சீட்-துணை முதல்வர் பதவி என்பது தவெகவின் சார்பாக வியூக வகுப்பாளர் ஒருவர் கிளப்பி விட்ட செய்தி என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் தவெக விஜய் கூட்டணி உண்மையா?

காங்கிரஸ் - தவெக விஜய் கூட்டணி தொடர்பான தகவல்களுக்கு உறுதியான எந்த ஆதாரமும் இல்லை என மூத்த அரசியல் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தங்கள் நிலையை வலுப்படுத்த, ஒரு சில காங்கிரஸ் தலைகள் இந்த உத்திகளைப் பயன்படுத்துகின்றன என்றே கருதப்படுகிறது.

திமுக கூட்டணி வட்டாரங்களின்படி, 2026 தேர்தலில் முந்தைய மாநிலத் தேர்தலை விட அதிக இடங்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பேரம் பேச திட்டமிட்டுள்ளது. சில மாவட்டங்களில் தங்கள் அமைப்பு பலம் அதிகரித்துள்ளதாகவும், இதை திமுக அங்கீகரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. காங்கிரஸ் - தமிழக வெற்றிக் கழகம் இடையே ஒரு கூட்டணி பற்றிய உறுதியற்ற செய்திகளை பரப்புவதன் மூலம், திமுகவிடம் அதிக இடங்களை கேட்க முடியும். திமுக கேட்ட இடங்களை கொடுக்க மறுத்தால்.. தவெகவிடம் செல்வோம் என்று திமுகவிற்கு பிரஷர் போட முடியும் .

ஆனால், காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் உடன் கைகோர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவே திமுக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசியல் சக்தி, அவர்களுக்கான வாக்கு வங்கி உறுதி செய்யப்படவில்லை, இதனால் காங்கிரஸ் அவர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. திமுக உடன் அவர்கள் வைத்து இருப்பது வெற்றி கூட்டணி என்று திமுக தரப்பு கருதுகிறது.

காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் வெவ்வேறு வாக்காளர் தளங்களைக் கொண்டுள்ளதால், திடீர் கூட்டணி சித்தாந்த ரீதியாக வெற்றிபெறாது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

காங்கிரஸ்

திமுக மற்றும் காங்கிரஸுக்கு இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பொதுவாக நீண்ட விவாதங்களை உள்ளடக்கியது. இதில் காங்கிரஸ் பெரும்பாலும் திமுக வழங்கத் தயாராக இருப்பதை விட அதிக இடங்களைக் கோரும். 2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், இரு கட்சிகளும் அடுத்த சில மாதங்களில் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், விஜய் வழியாக காங்கிரஸ் போடப்போகும் பிரஷர் திமுக தலைமைக்குத் தெரியும் என்றும், விஜய் மற்றும் காங்கிரஸ் பற்றிய இந்த கூட்டணி கதைகளை தேர்தல் கால உத்தியாகவே திமுக தலைமை பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு, கூட்டணி அப்படியே இருப்பதாகவும், இதில் பிரச்சனை எதுவும் இல்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+