2020ன் முதல் இரவே செம மழை.. சுவிஸ் போல மாறிய சென்னை சிட்டி.. இன்றும் சூப்பர் மழை இருக்காம்!

சென்னையில் நேற்று இரவு முழுக்க பல்வேறு பகுதிகளில் கனமானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Chennai hit with rain during new year

    சென்னை: சென்னையில் நேற்று இரவு முழுக்க பல்வேறு பகுதிகளில் கனமானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.

    நேற்று நாடு முழுக்க புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புத்தாண்டுக்கு இடையில் டிசம்பர் 31ம் தேதியில் இருந்தே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் கடந்த ஒரு வருடம் முழுக்க நன்றாக மழை பெய்தது. முக்கியமாக வடகிழக்கு பருவமழை நன்றாக மழை பெய்தது. சென்னையில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

    எங்கு மழை

    எங்கு மழை

    இந்த நிலையில் நேற்று சென்னையில் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரினா, தரமணி , கிண்டி, வளசரவாக்கம், தி நகர், கோடம்பாக்கம், சாந்தோம், பட்டினப்பாக்கம், அண்ணா சாலை போன்ற இடங்களில் மழை பெய்தது. இரவு முழுக்க விட்டு விட்டு மழை பெய்தது. புறநகர் சென்னையில் கனமழை பெய்தது.

    இப்போதும் மழை

    இப்போதும் மழை

    சென்னையில் சில இடங்களில் இப்போதும் மழை பெய்து வருகிறது. கிண்டி, வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    என்ன குளிர்

    என்ன குளிர்

    இந்த மழை காரணமாக சென்னையின் வெப்பநிலை திடீர் என்று குறைந்தது. சென்னையில் டிசம்பர் மாதம் என்றாலும் கூட அதிகமாக வெப்பநிலை நிலவி வந்தது. ஆனால் நேற்று மழைக்கு பின் அப்படியே மொத்தமாக வெப்பநிலை குறைந்து சுவிஸ் போல மாறியது.

    தொடரும் மழை

    தொடரும் மழை

    இந்த நிலையில் சென்னையில் இன்றும் நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும். வரும் 5ம் தேதி வரை இதேபோல் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+