செம.. சென்னைக்கு வருடத்தின் முதல் நாளே சூப்பர் லக்.. நல்ல மழை.. 2020 விளையாடிய மழை!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருடத்தின் முதல் நாளே நல்ல மழை பெய்து வருகிறது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருடத்தின் முதல் நாளே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவில் இருந்து சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
நாடு முழுக்க தற்போது புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய பெரு நகரங்களில் மிகப்பெரிய அளவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகிறது.
முக்கியமாக சென்னையில் நேற்று இரவு பெசன்ட் நகர் பீச், மெரினா பீச், திருவல்லிக்கேணி பீச் ஆகிய பகுதிகளில் மிகவும் சிறப்பாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இளைஞர்கள், மாணவர்கள் என்று பலர் ஒன்றாக கூடி சாலையில் நின்று புத்தாண்டு கொண்டாடினார்கள்.

சென்னை மழை
இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவில் இருந்து பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. தற்போதும் சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

எங்கு மழை
சென்னையில் கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, வடபழனி, கோடம்பாக்கம், அடையாறு, குரோம்பேட்டை, தி நகர், வளசரவாக்கம் எனச் சென்னையின் முக்கிய இடங்களில் காலையிலிருந்து விட்டுவிட்டு நல்ல மழை பெய்து வருகிறது.இதனால் அந்த பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

வேறு எங்கு மழை
அதேபோல் சிதம்பரம், கன்னியாகுமரி, கரூர், சிவகங்கை, செங்கல்பட்டு, கடலூர், நெல்லை, அரியலூர், காஞ்சிபுரம், கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோவையில் இன்று அதிகாலையில் இருந்து லேசான மழை பெய்து வருகிறது. நீலகிரியிலும் மழை பெய்து வருகிறது.

இன்று பெய்யும்
இன்று வரை சென்னையில் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. முக்கியமாக இன்று இரவு நேரங்களில் சென்னையில் மழை பெய்யலாம். அதேபோல் இரவு நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications