இருட்டில் வடமாநிலங்கள்.. உ.பி பஞ்சாப்பில் கடும் மின்வெட்டு.. சாலையில் இறங்கிய மக்கள்.. நிலை என்ன?
சென்னை: நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக வடமாநிலங்களில் மிக கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள்தான் மின் தடையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா தனது மின்தேவைக்கு அதிகம் நம்பி இருப்பது நிலக்கரியைத்தான். மொத்த மின்சார உற்பத்தியில் இந்தியாவில் 70 சதவிகிதம் நிலக்கரியில்தான் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய நிலக்கரி இல்லாத காரணத்தால் நிலக்கரி மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாக நிலக்கரி இறக்குமதியும் குறைந்து இருப்பதால் நாடு முழுக்க மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் மின்சார பிரச்சனை இருக்கும் ஆல் இந்தியா பவர் எஞ்சினியர் பெடரேஷன் தலைவர் சைலேந்திர துபே எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில், தற்போது வடமாநிலங்கள் பல இருளில் மூழ்கி உள்ளன.

நிலக்கரி
தற்போது வெப்ப காற்று, வெயில் காலம் போன்ற காரணங்களால் மின்சார தேவை அதிகம் ஆகியுள்ளது. இந்தியாவின் ஒருநாள் மின்சார தேவை நேற்று புதிய ரெக்கார்ட் படைத்தது. நேற்று ஒரே நாளில் 204.65 ஜிகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. இந்திய வரலாற்றில் ஒரே நாளில் பயன்படுத்தப்பட்ட அதிக மின்சாரம் இதுதான். மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் போதிய அளவில் நிலக்கரி இல்லாமல் மின்தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தட்டுப்பாடு
டெல்லியில் பல இடங்களில் 2-3 மணி நேரம் மின்தடை ஏற்படும் சூழ்நிலை உண்டாகி உள்ளது. மத்திய மின்சார அத்தாரிட்டி தெரிவித்து ரிப்போர்ட்டில் 165 அனல்மின் நிலையங்களில் மொத்தம் 56 அனல் மின் நிலையங்களில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே நிலக்கரி உள்ளது. 26 அனல்மின் நிலையங்களில் 5 சதவிகிதம் மட்டுமே நிலக்கரி உள்ளது என்றுள்ளது. இதனால் பல அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி
டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இது பற்றி அளித்த பேட்டியில், எங்களிடம் ஒரே ஒருநாளுக்கான நிலக்கரி மட்டுமே உள்ளது. மத்திய அரசிடம் கூடுதல் நிலக்கரி கேட்டு இருக்கிறோம். மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது. எங்களிடம் 21 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு இருக்க வேண்டும். ஆனால் இல்லை. இதனால் மெட்ரோ சேவைகள், மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றுள்ளார்.

பஞ்சாப்
பஞ்சாப்பில் மின்தடை காரணமாக மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். புதிய மின்சாரத்துறை அமைச்சர் ஹர்பஜன் சிங் வீடு முன் மக்கள் போராடி வருகிறார்கள். அங்கு தினமும் 6 மணி நேரம் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. அங்கு மின்தடை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் மின்சார உற்பத்தி உயரவில்லை. இதனால் மக்கள் கொதித்து போய் சாலைகளில் இறங்கி போராடி வருகிறார்கள் .

உத்தர பிரதேசம்
அதே போல் உத்தர பிரதேசத்தில் தினசரி மின்வெட்டு 6 மணி நேரம் வரை அதிகரித்துள்ளது. பல கிராமங்கள் இதை விட அதிக மணி நேரம் மின் தடையை சந்தித்து வருகின்றன. அங்கு மொத்தம் 26 சதவிகித நிலக்கரி மட்டுமே உள்ளது. இதுவும் விரைவில் தீரும் சூழ்நிலை உள்ளது. கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அங்கு மின் தேவை உள்ளது. இதனால் அங்கு மின்சார தடை 1.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியானாவில் மின்தடை 8.7 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான்
ராஜஸ்தானில் மின் தடை கைமீறி சென்றுள்ளது. அங்கு 3-4 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டு வருகிறது,. இது அறிவிக்கப்படாத மின் வெட்டு. மற்றபடி அரசு அதிகார்பூர்வமாக கிராமங்களில் 3 மணி நேரம், நகரங்களில் 2மணி நேரம் மின் தடை இருக்கும் என்று அறிவித்துள்ளது. அங்கு மக்கள் ஒரு யூனிட்டிற்கு 15 ரூபாய் செலுத்தியும் மின் தடை அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

குஜராத்
குஜராத்தில் 600 மெகாவாட் மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு உள்ளது. இதை சமாளிக்க அங்கு தொழிற்சாலைகளை வாரத்தில் ஒருநாள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு ஏப்ரல் முதல் வாரம் 453 வேகன்ஸ் நிலக்கரி தேவை. ஆனால் இருந்தது என்னவோ 379 வேகன்ஸ் மட்டுமே. இதை வரும் நாட்களில் உயர்த்த வேண்டும். நிலக்கரி தேவை 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் மின்தடை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications