"அடிமடியிலேயே" கைவைத்த எடப்பாடி.. காலியாகும் பாஜக ஐடி விங்! அண்ணாமலைக்கு “ஷாக்” கொடுக்கும் அதிமுக
கோ பேக் மோடி ஹேஷ்டேக்குகளுக்கு போட்டியாக டிஎன் வெல்கம் மோடி என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து முதலிடமும் பிடிக்க வைத்தது தமிழ்நாடு பாஜக ஐடி விங்.
சென்னை: பாஜகவில் நிர்மல் குமார் தொடங்கி அடுத்தடுத்து அண்ணாமலைக்கு எதிராக அக்கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்து வரும் நிலையில் இன்று ஐடி விங்கை சேர்ந்த மேலும் 13 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய இருப்பதாக அறிவித்து இருப்பதன் மூலம் தமிழ்நாடு பாஜகவின் வலுவான கையாக பார்க்கப்பட்ட ஐடி விங் தற்போது வலு இழந்துள்ளது.
தமிழ்நாடில் பாரதிய ஜனதா கட்சி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான மக்களால் அதிகளவில் அறியப்படாத கட்சியாகவே இருந்தது. 2014 ஆம் ஆண்டு மத்தியில் அக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகே பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டில் தொடங்கியது.
தமிழிசை சவுந்திரராஜன், எல்.முருகன் போன்றோர் தமிழ்நாடு பாஜகவில் தலைவர்களாக இருந்தபோது உறுப்பினர் சேர்க்கை மட்டுமின்றி பிற கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்களை பாஜகவுக்கு அழைத்து வந்தனர்.

பாஜக ஐடி விங்
களத்தில் இப்படியென்றால் இணையதளத்தில் தமிழ்நாடு பாஜக ஐடி விங் பிரதான கட்சிகளிடம் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்தது. தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கோ பேக் மோடி சொல்லி ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்படும் ஹேஷ்டேக்குகளுக்கு போட்டியாக டிஎன் வெல்கம் மோடி என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து முதலிடமும் பிடிக்க வைத்தது தமிழ்நாடு பாஜக ஐடி விங்.

நிர்மல் குமாருக்கு விருது
இதற்காக பாஜக ஐடி பிரிவுகளில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு அதன் தலைவர் நிர்மல் குமாருக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விருது வழங்கி கவுரவித்தார். அதேபோல், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து புகைப்படம் வெளியிட்டது என பல சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு தமிழ்நாடு அரசியலில் தொடர்ந்து விவாதங்களையும் பாஜக ஐடி விங் கிளப்பி வந்தது.

ஐடி விங்கின் செயல்பாடு
இப்படி இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாஜக சென்றடைய அக்கட்சியின் ஐடி விங் முக்கிய பங்காற்றியது. இதில் குறிப்பாக தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக இருந்து சமூக வலைதளங்கள் மூலமாக பாஜகவின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று விமர்சனங்களுக்கு பதிலடியை கொடுப்பதில் பெரும்பங்காற்றியவர் நிர்மல் குமார்.

கட்சியிலிருந்து விலகல்
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி எதிர்ப்புகளை வாங்கிக்கட்டும் நிர்மல் குமார், பாஜகவின் முதுகெலும்பாகவே இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி அவர் திடீரென தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

அண்ணாமலை மீது விமர்சனம்
"என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்." என்று ட்விட்டரில் கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டார் நிர்மல் குமார்.

திலிப் கண்ணன்
நிர்மல் குமாருக்கு எதிராக பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், அவரை அதிமுகவில் இணைத்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மறுநாளே தமிழ்நாடு பாஜக ஐடி விங் செயலாளர் திலிப் கண்ணனும் பாஜகவிலிருந்து விலகி நிர்மல் குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இணைந்த பாஜகவினர்
அண்ணாமலை மீது திலிப் கண்ணனும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்தார். இந்த நிலையில் இன்று சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் தலைவர் அன்பரசு தலைமையில் மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என 13 பேர் விலகி இருக்கிறார்கள். அடுத்தடுத்த விலகலால் தமிழ்நாடு பாஜக ஐடி விங் ஆட்டம் கண்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications