போச்சே.. இந்த வருடம் ITR ரீபண்ட் குறைக்கப்படுகிறதா? பலருக்கு குறைவாக வழங்க திட்டம்? என்ன காரணம்?
சென்னை: வருமான வரி கட்டும் பலருக்கும் இந்த வருடம் குறைந்த அளவே வருமான வரி ரீபண்ட் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வருடம் வருமான வரி தாக்கல் செய்ததில் முறைகேடு, மாற்றம், பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த வருடம் குறைந்த அளவே வருமான வரி ரீபண்ட் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் வருமான வரியில் தவறுகள் இருந்தால் அதை சரி செய்ய, பிரச்சனைகளை ஈடுகட்ட இந்த வருடம் வழங்கப்படும் வருமான வரி ரீபண்ட் குறைக்கப்படும்.
அதேபோல் கடந்த வருடம் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்து இந்த வருடத்திற்கு முன்பாக திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு அதற்கான கணக்கு சோதனைகள் முடிந்த பின்பே இந்த வருடத்திற்கான ரீபண்ட் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வருமான வரி
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடங்கி உள்ளது. இன்னும் பலருக்கு ITR விண்டோ திறக்கவில்லை என்றாலும் வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய முடியும். ஏப்ரல் 2ம் தேதி முதல் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் கால அவகாசம் தொடங்கி உள்ளது. ஆனால் ஏப்ரல் தொடங்கி 1 வாரம் ஆகியும் கூட.. இதுவரை வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் தளத்தில் இந்த நிதி ஆண்டிற்கான அதாவது 2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதுவரை சம்பளதாரர்கள் பலரும் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத சூழல் உள்ளது.
2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதை படிப்படியாக திறக்க உள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏழு ஐடிஆர் படிவங்கள் வழங்கப்பட்டது, எனவே வருமான வரி கணக்கு தாக்கல் இந்த மாதம் தொடங்குவதை உறுதிசெய்ய தேவையான படிவங்களை வரித்துறை விரைவில் வழங்கும். கொஞ்சம் கொஞ்சமாக இந்த படிவங்கள் அளிக்கப்படும். பொதுவாக, இந்த பயன்பாடுகள் ஏப்ரல் முதல் படிப்படியாக வெளியிடப்படும். குறிப்பாக ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 போன்ற படிவங்களுக்கு வருமான வரி போர்ட்டலில் அனுமதி தரப்பட்ட உடனே ITR தொடங்கும்.
எப்போது refund வரும்
ஏற்கனவே இந்த படிவம் திறந்து ITR தாக்கல் செய்தவர்களுக்கு.. இன்னும் 15-20 நாட்களில் refund கிடைக்கும். இனி தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்சம் 1 மாதத்தில் refund கிடைக்கும். ஏப்ரல் முதல் நீங்கள் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். நீங்கள் அந்த ஸ்லாபில் இருக்கும் பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதில் பின் வரும் தவறுகளை செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரிட்டர்ன் refund தொகை கிடைக்காமல் போகலாம்.
வருமான வரி refund கிடைக்காது
பலருக்கும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் ரீ பண்ட் கிடைக்காமல் போகலாம். முதலாவதாக, வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும். வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விடும் வாய்ப்புகள் உள்ளன. ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் பலர் இப்படி செய்வது இல்லை இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படுவது இல்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல்ஸ் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ரி பண்ட் சென்றுவிடும்.
வருமானத்தில் வரி செலுத்துவோரின் கோரிக்கைகளை நிரூபிக்கும் விதமாக சில கூடுதல் ஆவணங்கள் வரி அதிகாரிக்கு தேவைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீங்கள் லோன் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.. ஆனால் உங்கள் கணக்கில் வீட்டு லோனிற்கான ஆதாரங்கள் இல்லையென்றால் அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் கேட்கப்படும். இதுபோன்ற சமயங்களில், வரி செலுத்துபவருக்கு இவற்றை வழங்குமாறு வரி அலுவலர் கோரிக்கைகளை அனுப்புவார். இவை வரி அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன், ரிட்டர்ன் தரப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications