“மார்கழியில் மக்களிசை” - பறை இசைத்து தொடங்கி வைத்த கனிமொழி, வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ்!
சென்னை: "மார்கழியில் மக்களிசை" நிகழ்ச்சியை பறை இசை அடித்து திமுக எம்.பி கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பெருநகரங்களில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து நடத்தி வருகிறது. மார்கழி மாதம் என்றாலே பொதுவாக கர்னாடக சங்கீதம் என்கிற நிலை மாறி நாட்டுப்புற இசை, பறை இசை, ராப் இசை என பல்வேறு இசை வகைகள் ஒரே இடத்தில் அரங்கேற்றப்படுகிறது.

சென்னையில் பல்வேறு தரப்பு ரசிகர்களின் பங்களிப்புடன் வெற்றிகரமாக 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி, 6வது முறையாக இந்த ஆண்டும் தொடங்கி உள்ளது. சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரியில் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் 6 ஆம் ஆண்டு 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி இன்று தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திமுக எம்.பி கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் இன்று பறை அடித்து மார்கழியில் மக்களிசை நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
"செய்யும் வேலை நேர்மையாக இருப்பதால்தான் இவ்வளவு பேர் ஆதரிப்பதாக நம்புகிறேன். கலை மக்களுக்கானது, அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையை நீலம் பண்பாட்டு மையம் அம்பேத்கர் வழியில் நின்று தொடர்ந்து செய்யும்" என மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார். மேலும், கனிமொழி நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் இருந்து தான் எனக்கு இது போன்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு எண்ணம் தோன்றியது என பா.ரஞ்சித் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கனிமொழி எம்.பி பேசுகையில், "நம் கலை வடிவங்களை, மொழியை பறித்துக்கொண்டே இருக்கிறார்கள். நம் பறையை கூட யார் யாரோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இசை நமது என்று சொல்லக்கூடிய மேடையாக இதனை மாற்றி இருக்கிறார் பா.ரஞ்சித். 6 ஆண்டுகளாக மக்களிசையை கொண்டாடக்கூடிய நிகழ்வை நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி" எனத் தெரிவித்தார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications