மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மாமன்னன்:3 கோணங்கள், 3 விமர்சனங்கள்- இப்படியும் பார்வைகள்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போதைக்கு தாம் நடிக்கும் கடைசி படம் என்ற அறிவிப்புடன் வெளியாகி இருக்கிறது மாமன்னன்.
தலித் அரசியலை அழுத்தமாக பேசுகிற இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் இதுவரை நகைச்சுவை நடிகராக கொண்டாடப்படுகிற வடிவேலு கனமான பாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். மாமன்னன் திரைப்படம் குறித்த 3 கோணங்களிலான 3 விமர்சனங்கள்:

சமூக நீதி ஆதரவாளர்: மார்ஜி செல்வராஜ் படம் பட்டையை கிளப்பியிருக்கிறது. ஜாதிவெறிக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார். பன்றிகள், பெரியார் சிலை, அம்பேத்கர் என படம் நெடுகிலும் அழுத்தமான ஆழமான குறியீடுகள்.. ஒடுக்கப்பட்ட மக்கள் என்ன மொழியில் பேச வேண்டும்? என்ன வகையில் சண்டை செய்ய வேண்டும்? ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுக்கு அரசியல் கட்சி தலைமைகள் என்ன மாதிரியான இழப்பீடு செய்து சரி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் மிக இயல்பாக உறுத்தல் எதுவுமில்லாத மொழிநடையில் வகுப்பு எடுத்திருக்கிறார். பள்ளிக்கூட மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல சமூகத்துக்கு அற்புதமான பாடத்தை வழங்கி இருக்கிறது இந்த கூட்டணி. ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயிரமாண்டுகால வலியை அற்புதமாக காட்டி இருக்கிறார் மாரி செல்வராஜ். நிஜத்தில் அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இப்படியான ஒரு கனமான பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருப்பது மிக சிறப்பு. பாராட்டுக்குரியது.
ஜாதிய சங்க ஆதரவாளர்கள்: மாரி செல்வராஜ் போன்றவர்கள்தான் ஜாதிய விவகாரங்களை கூர்மைப்படுத்துகிறார்கள். ஜாதிய மோதல்களை இதற்கு முன்னரும் படமாக காட்டி இருக்கிறார்கள்; உள்ஜாதி மோதலையும் படமாக காட்டி இருக்கின்றனர். ஜாதிய மோதலை கருவாக கையில் எடுப்பது என்பது கடினமான ஒன்று. அதை ஒரு ஜாதியின் பக்கம் மட்டுமே நின்று பேசுவது என்பதும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை குறியீடாகக் கொண்டு கதாபாத்திரங்களை திணிப்பது என்பதெல்லாம் தேவையற்றது. அதுவும் சேலம் மாவட்டம், ஜாதிய அரசியல், முதன்மை அரசியல் கட்சிகள் என்பது எல்லாம் எவராலும் எந்த ஜாதியை, எந்த அரசியல் தளத்தை குறிப்பிடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய படங்கள் மூலம் ஜாதிய மோதல்கள் தென்மாவட்டங்களில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கும் வடமாவட்டங்களுக்கும் பரப்பிவிடப்படுகிற அபாயம்தான் இருக்கிறது. இந்தப் ப்டத்தை ஏற்கவே முடியாது.

பெரியாரிஸ்ட்டின் பார்வை: ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை மாரி செல்வராஜ் வெளிப்படுத்துவது உண்மை. ஆதிக்க ஜாதிகளின் உண்மை முகத்தை தோலுரிப்பதும் உண்மை. மாரி செல்வராஜ் தமது படங்களின் மூலம் ஜாதிகள் என்பதே இரு சமூகங்களுக்கு இடையேயானது மட்டுமே என்கிற ஒரு கற்பிதத்தை நிலைநாட்டுகிறார். ஜாதி என்பது பிராமணிய சித்தாந்தம்; சனாதனத்தின் கோட்பாடு; எதிர்க்கப்பட வேண்டியது பிராமணியம், ஆரியம் என்பதுதான். இந்த யதார்த்தத்தை கூர்மையாக சொல்லாமல் ஏதோ தமிழ்ச் சமூகத்தின் இரு ஜாதிகளுக்கு இடையேயான மோதலாக தொடர்ந்து மார்ஜி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் பேசுவதும் சினிமாவாக முன்வைப்பதும் போதாமையின் வெளிப்பாடு என்பதாகவே பார்க்க முடியும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications