அரசின் அதிகார மமதை.. மாரிதாஸுக்கு சட்ட உதவிகளை செய்வோம்.. பாஜக அண்ணாமலை ட்விட்
சென்னை: மாரிதாஸ், கல்யாண் ராமன் கைதுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசு குறித்தும், தமிழ்நாடு குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக கூறி மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். Maridhas Answers என்ற பெயரில் இயங்கும் யூடியூப் சேனலில் இவர் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டதாக புகார் வைக்கப்பட்டு வந்த நிலையில் இவர் செய்த ட்விட் ஒன்றிற்காக மதுரையில் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.
பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை காவல்துறையில் அளித்த புகாரின் பெயரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரிதாஸ் கைது
இந்த நிலையில் மாரிதாஸை வரும் டிசம்பர் 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம்தான் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு குறித்தும், சில பெண் தலைவர்கள் குறித்தும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் சில ட்விட்களை பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் செய்து வந்தார்.

கைது
சில நாட்களுக்கு முன்பு விசிக எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜியின் மனைவியும் நடிகையுமான டாக்டர் ஷர்மிளா குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டு கல்யாணராமன் ட்வீட் செய்து இருந்தார். இது தொடர்பான புகாரில் கைதானவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் மாரிதாஸ், கல்யாண் ராமன் கைதுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார்.

உதவி
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்துள்ள ட்விட்டில், திமுக தன்னுடைய அதிகார மமதையினால், விமர்சனம் செய்பவர்கள் எல்லோருக்கும் விலங்கு பூட்டுகிறது. திமுக அரசால் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்ட பாஜக உறுப்பினர் கல்யாண் ராமன் மற்றும் பிற தேசியவாதிகளுக்கு சட்டப்பூர்வ தீர்வுகளை, உதவிகளை தமிழக பாஜக செய்து வருகிறது.
Recommended Video

சட்டம்
சட்டம் உத்தரவாதம் அளிக்கும் கருத்துச் சுதந்திரத்தை கடுமையாக மீறி பழிவாங்க மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்க பாஜக போராடும். அனைவருக்கும் சட்ட மற்றும் இதர உதவிகளையும் பாஜக கட்சி முன்நின்று செய்யும்! அவர்களின் குடும்பத்தை பாஜக கவனித்துக்கொள்ளும், என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார்.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம்












Click it and Unblock the Notifications