"பஞ்சை திருடிட்டு போறாங்க".. கைதான மாரிதாஸ்.. வைரலாகும் பழைய வீடியோ.. சொன்னது என்ன?
சென்னை: சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி யூ டியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் அவரின் பழைய வீடியோக்கள் சில இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
Recommended Video
மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ் பாஜக ஆதரவாளராக கருதப்படுபவர். இவர் வலதுசாரி கொள்கை கொண்ட வீடியோக்களையும், திமுக எதிர்ப்பு வீடியோக்களையும் Maridhas Answers என்ற பெயரில் இயங்கும் யூடியூப் சேனலில் வெளியிடுவது வழக்கம்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக கூறி இவர் கைது செய்யப்பட்டார்.
அரசு மருத்துவர்கள் மருத்துவமனை பெட்ல இருந்து பஞ்சை திருடிட்டு போறாங்கன்னு சொன்ன வழக்கையும் சேர்த்து போடுங்க pic.twitter.com/ztAbWeYTMH
— பூதம் (@angry_birdu) December 9, 2021
"விவசாயம் என்கிற பெயரில் விவசாயிகள் நிலத்தை கற்பழிக்கிறார்கள். மானியம் பெறுவதற்காக சொட்டு நீர் பாசனம் என்கிற பெயரில் பல விவசாயிகள் ஊரை ஏமாற்றுகிறார்கள்"
— பூதம் (@angry_birdu) December 9, 2021
- மாரிதாஸ்
இன்னொரு வழக்கு பார்சல்! pic.twitter.com/nHxNNOSdbW

மாரிதாஸ் கைது
முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் மணிகண்டன் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பின் மரணம் அடைந்தது குறித்தும் அரசுக்கு எதிராக மாரிதாஸ் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தவறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக மதுரை நகரக் காவல்துறை மாரிதாஸை கைது செய்தது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு ஒன்றுதான் இதற்கு காரணம். பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை காவல்துறையில் அளித்த புகாரின் பெயரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாதி
அரசு உயர் அதிகாரிகளை அவமதித்தல், சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜாதி, மத இன வேறுபாட்டை தூண்டும் வகையில் பிரச்சனை ஏற்படுத்துவதாகவும் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாரிதாஸை வரும் டிசம்பர் 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

என்ன
இந்த நிலையில் மாரிதாஸ் ஆதரவாளர்கள் பலர் இணையத்தில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். திமுகவிற்கு எதிராக இருந்த காரணத்தால்தான் அவரை அரசு கைது செய்துள்ளது. பாஜக ஆதரவாளர் என்பதால் இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று இணையத்தில் மாரிதாஸ் ஆதரவாளர்கள் ட்விட் செய்து வருகிறார்கள்.

வீடியோ
இன்னொரு பக்கம் மாரிதாஸ் கைதை சிலர் வரவேற்றும் உள்ளனர். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை இவர் கூறி வந்தார். அவரை கைது செய்ததில் தவறு இல்லை என்றும் சிலர் ட்விட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் மாரிதாஸின் பழைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திமுகவை பாகிஸ்தான் இயக்கம் ஒன்றோடு இவர் தொடர்பு படுத்தி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

விமர்சனம்
பலர் இந்த வீடியோவிற்கு எதிராக விமர்சனம் வைத்துள்ளனர். இதனால் மேலும் பல வழக்குகளின் கீழ் இவரை கைது செய்ய வேண்டும் என்று திமுக ஆதரவாளர்கள் பலர் ட்விட் செய்து வருகிறார்கள். அதன்படி மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் இருந்து பொருட்களை திருடி செல்வதாக மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ ஒன்றும் சர்ச்சையாகி உள்ளது. மருத்துவர்களை விமர்சனம் செய்து மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவை நெட்டிசன்கள் வெளியிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

பஞ்சு
அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவமனையில் இருக்கும் பெட்டில் இருந்து பஞ்சுகளை திருடி செல்வதாக இந்த வீடியோவில் மாரிதாஸ் குறிப்பிட்டுள்ளார். கொரோனா காலத்தில் கஷ்டப்படும் மருத்துவர்களை பற்றி தவறாக மாரிதாஸ் இப்படி விமர்சனம் செய்ததற்கு எதிராக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள்
அதேபோல் விவசாய கடன் என்ற பெயரில் விவசாயிகள் ஏமாற்றுகிறார்கள். மானியம் பெறுவதற்காக சொட்டு நீர் பாசனம் என்கிற பெயரில் பல விவசாயிகள் ஊரை ஏமாற்றுகிறார்கள், என்று மாரிதாஸ் கூறிய வீடியோவையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள். ஆதாரம் இன்றி அவர் குற்றம்சாட்டி உள்ளார். இதிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications