நீங்க கத்துனா நானும் கத்துவேன்! இப்படிதான் பேசுவேன்! என்ன கேலி பண்றீங்களா? கோபத்தில் மரியவில்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனது தமிழ் மொழி இப்படித்தான் இருக்கும், என்ன கேலி செய்றீங்களா என நிதித் துறை அமைச்சர் மரியவில்சன் கோபத்தில் கொந்தளித்தார். மைக்கையும் வேகமாக மேஜையில் படும்படி தள்ளிவிட்டார். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பட்ஜெட் தொடர் மீதான விவாதத்திற்காக, இன்று சட்டசபை மறுபடியும் கூடியது. அப்போது கடையநல்லூர் மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் தனது கருத்துக்களை முன்வைத்து பேசினார். அவர் பேசுகையில், நிதியமைச்சர், பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, ஒரு தமிழ் ஆர்வலர், சொற்பொழிவாளர் என்ற முறையில் அவரது பேச்சை நான் உன்னிப்பாக கவனித்தேன்.

Marie Wilson

அவரின் ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது. ஆனால் தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார். சில சொற்தொடரில் இலக்கணப் பிழை இருந்தது. நான் இதை குறையாகவோ குற்றச்சாட்டாகவோ இந்த அவையில் வைக்கவில்லை.

நிதியமைச்சர் வரும் காலத்தில் பட்ஜெட் வாசிக்க நேர்ந்தால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவருக்கு தமிழ் உச்சரிப்பை சிறப்பாக செய்ய முயற்சிகளை செய்ய வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அப்போது அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், குறுக்கிட்டார். நீங்கள் பேசும் போது நான் கவனித்தேன். 9 முறை பட்ஜெட் என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டீர்கள். அதை நிதி நிலை அறிக்கை என கூறியிருக்கலாம் என்றார். அதாவது, நீங்கள் பிறர் மீது குற்றம் கண்டுபிடிக்கிறீர்களே, நீங்களே தூய தமிழிலில் பேசவில்லையே என்ற அர்த்தத்தில் சுட்டிக் காட்டினார் சபாநாயகர்.

உடனே ராஜேந்திரன், மன்னிக்கவும், நேரம் கருதி விரைவாக எனது உரையை முடிக்க வேண்டும் என்பதற்காக ஊடால அதுபோன்ற வார்த்தைகளை சேர்த்துக்கிட்டேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி என்றார். நிதி நிலை அறிக்கை என கூறினால் நேரம் அதிகம் எடுத்துவிடுமாம், எனவே பட்ஜெட் எனக் கூறினேன் என்று பொருள் தரும்வகையில் ராஜேந்திரனின் விளக்கம் இருந்தது.

அப்போது அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து நின்று தனது கருத்தை முன்வைத்தார். அவர் பேசுகையில், "தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் என்ற முறையில் நான் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். திடீரென பேரவைத் தலைவர் குறுக்கீடு செய்தவுடன் ஊடால ஊடால என மதிமுக எம்எல்ஏ அவரை அறியாமல் சொல்லிவிட்டார்.

அதை போல் ஒவ்வொருத்தரும் இயல்பான தமிழில் பேசலாம். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தமிழ் இருக்கிறது. நெல்லை தமிழ் கொஞ்சும் , மதுரை தமிழ் வாள் வீசும், குமரி தமிழில் அலையாடும், சென்னை தமிழில் உழைக்கும் மக்களின் வியர்வை வாசம் வீசும்.

என் தமிழை வாஞ்சையோடு பாராட்டிய மதிமுக எம்எல்ஏ, நிதியமைச்சர் என்னிடம் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என சொன்னார். அப்படி பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சங்கத்தமிழிலா பேசுகிறார்? அவரே இயல்பான தமிழில்தான் பேசுகிறார். அப்படி வகுப்புகள் நடத்த வேண்டும் என்றால் நேர்மையான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக, நிதியமைச்சர்தான் வகுப்பெடுக்க வேண்டும், அதில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

அப்போது மரிய வில்சன் குறுக்கீடு செய்து எழுந்து நின்றார். அவர் ஆவேசமாக பேசத் தொடங்கினார். "நான் கூடைப்பந்து விளையாடுபவன். offence-ம் ஆடுவேன், defence-ம் ஆடுவேன். எப்ப defence ஆடணும், எப்ப offence ஆடணும்னு எனக்கு தெரியும். (அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.)

நீங்கள் கத்தினால் நானும் கத்துவேன். நான் ஒரு 25 முதல் 30 ஆண்டுகளாக கல்வித் துறையில் இருந்தேன். எனது பேச்சுகள் எல்லாமே ஆங்கிலத்தில்தான் இருந்தது. இப்போது இந்த மாமன்றத்தில் கொஞ்ச நாட்களாகவே உருவ கேலி செய்வது, சாதி தொடர்பாக, பெண்கள் தொடர்பாக என இப்போது மொழி தொடர்பாக கேலி செய்ய வந்துவிட்டார்கள். எனக்கு எனது கிறிஸ்துவம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறது..

அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. இதை கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது. இது தமிழ் படித்தவர்களுக்குக் கூட தெரியாது. நான் பைபிளில் படித்துள்ளேன். 60- 75 நாட்களாக துறைரீதியாக கூட்டங்கள் வைத்தோம். அதில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறோம். ரூ 15 ஆயிரம் கோடி கருவூலத்திற்கு வந்திருக்கிறது. அதை பற்றி பேசாமல் நான் இப்படித்தான் பேச வேண்டும் என எனக்கு அறிவுரை கூற வேண்டாம்.

எனது தனித்துவம் இது. எனக்கு இப்படித்தான் பேச தெரியும். ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள முடியாது. நான் அப்படித்தான் பேசுவேன், என்னுடைய ஸ்டைல் இதுதான். கேலி பண்றீங்களா" என மரியவில்சன் கோபத்துடன் கேட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+