மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? வேளாங்கண்ணி செல்லும் வழியில் மரியவில்சன் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சீர்காழி: நிதி நிலைமை சீரான பிறகு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சீர்காழியில் அமைச்சர் மரிய வில்சன் பேட்டி அளித்துள்ளார்.

வேளாங்கண்ணிக்கு 28-வது ஆண்டாக பாதயாத்திரை செல்லும் வழியில், சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், அரசின் 100 நாள் சாதனை, நிதி மேலாண்மை மற்றும் மகளிர் உரிமைத் தொகை குறித்து விரிவாகப் பேசினார்.

magalir urimai thogai

தமிழக அமைச்சரான பிறகு முதன்முறையாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ள அவர், செல்லும் வழியில் பொதுமக்கள் அளித்து வரும் வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் ஆர்வத்துடன் கவனித்து வருவதாகவும், அரசின் முதல் 100 நாள் செயல்பாடுகள் மற்றும் பட்ஜெட் ஆகியவற்றிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் வெற்றி மற்றும் பதவியேற்பின் போது குறிப்பிட்டபடி, ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதே அரசின் முதல் நோக்கம் என்றும், கடந்த 100 நாட்களில் லஞ்ச ஒழிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத் தொகை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர், "ஆட்சிப் பொறுப்பேற்றதும் வெள்ளை அறிக்கை மூலம் மாநிலத்தின் நிதி நிலைமை தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

கலால் வரி, பத்திரப் பதிவு மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, வருவாயை பெருக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருவாய் நிலை மேம்பட்டவுடன் முதலமைச்சர் உரிய முடிவை அறிவிப்பார்."

பள்ளிக்கல்வித் துறையில் முந்தைய காலங்களில் நிலவிய முறைகேடுகள் மற்றும் புகார்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

மேலும், அரசியல் விமர்சனங்கள் மற்றும் கூட்டணிக் குறித்த கேள்விகளுக்கு, மக்கள் அனைத்தும் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியவை என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+