AI City: இந்தியாவின் முதல் ஏஐ நகரம்! அறிவகத்தில் என்னென்ன வசதிகள்? மரியவில்சன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு நகரம் ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் மரியவில்சன் அறிவித்துள்ளார். இதற்கு அறிவகம் என பெயரிடப்பட்டுள்ளது.

2026- 2027 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு நகரம் ஏற்படுத்தப்படும்.

tamil nadu budget ai

ஏஐ பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், குறை கடத்தி சோதனை ஆய்வகம், ஏஐ, குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கான ஒருங்கிணைந்த மையம் அமைக்கப்படும். இதற்காக ரூ 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக செயற்கை நுண்ணறிவு அமைப்பு சுகாதாரம், விவசாயம், கல்வி, குடிமக்கள் சேவைகளை வழங்கும். அது போல் வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

சூரிய மின்பலகைக்கு ரூ 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ரூ 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை நகரின் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கப்படும். மாநிலத்தில் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

ரூ 1,543 கோடி முதலீட்டில் 178 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். ரூ 2000 கோடியில் 40 ஆயிரம் பழைய மின்மாற்றிகள் மாற்றப்படும். தடையற்ற மற்றும் தரமான மின் விநியோகத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

5 ஆண்டுகளில் 20 ஆயிரம் பொது இவி சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ரூ 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குடியிருப்புகளில் இவி சார்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியமாக ரூ 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

எரிசக்தி துறைக்கு ரூ15,828 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உலகதரத்தில் சென்னையை உருவாக்க ரூ 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு மரியவில்சன் தெரிவித்தார்.

ஏஐ நகரம் என்பது ஏஐ ஆராய்ச்சி, ஏஐ கருவிகளை உருவாக்குதல், நகரின் அனைத்து செயல்பாடுகளிலும் ஏஐயை நேரடியாக பயன்படுத்துவதற்கும் வடிவமைக்கப்படும் இடம்.

இந்த அறிவகத்தில் ரோபோடிக்ஸ், மருத்துவ ஏஐ மற்றும் தானியங்கி வாகனங்களுக்கான சோதனைகள், நடைபெறும். உலகில் சான்பிரான்ஸிஸ்கோவிலும் சீனாவின் பெய்ஜிங்கிலும் சிங்கப்பூர், லண்டன், டொராண்டோ, சியோல் உள்ளிட்ட இடங்களில் ஏஐ நகரங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+