மீன் சந்தையை அகற்றி விட்டு பிரமாண்ட சாலை.. தெருவுக்கு வந்த மீனவர்கள்.. மெரீனாவில் பதட்டம்

சென்னை நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மெரினாவில் குமுறும் மீனவர்கள்- வீடியோ

    சென்னை: சென்னை நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மெரினாவில் மீனவர்களின் பயன்பாட்டிற்காக பொது பயன்பாட்டு இடம் நிறைய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை மீனவர்கள் மீன் விற்கவும், மீன் உணவுகள் விற்பனை செய்யவும் பயன்படுத்தி வந்தனர்.

    மீனவர்களின் வாழ்வாதாரத்தில் இந்த இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் உள்ள கடைகள் அனைத்தையும் தமிழக அரசு அகற்ற முடிவெடுத்துள்ளது. மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டம் என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

    அரசு திட்டம்

    அரசு திட்டம்

    இந்த பகுதியை மீனவர்கள் பல வருடங்களாக பாரம்பரியமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் அவர்களை அப்புறப்படுத்தி அந்த இடத்தை அகலப்படுத்தி, அழகுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது. அங்கு அதிவிரைவு சாலை அமைக்கவும் அரசு முடிவெடுத்து உள்ளது.

    என்ன போராட்டம்

    என்ன போராட்டம்

    இதற்கான பணிகள் நடந்து வருவதால் மீனவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். சென்னை நொச்சிக்குப்பம் மற்றும் அருகாமையில் உள்ள மீனவ பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

    நிறைய பேர்

    நிறைய பேர்

    சென்னை மெரினாவில் மீனவ குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உட்பட பலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 500 பேருக்கும் அதிகமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். குழந்தைகள் சிலரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    பெரும் பதற்றம்

    பெரும் பதற்றம்

    போராட்டம் காரணமாக மெரினாவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 700 போலீசார் வரை அங்கு குவிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. நிறைய போலீசார் குவிக்கப்பட்டதால் மெரினாவில் பரபரப்பு நிலவுகிறது. அந்த பகுதிக்கு மக்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+