20களில் திருமணம், 30 வயதிற்குள் 2 குழந்தைகள், இப்போது 40களில் அற்புதமான உருமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 20களில் திருமணம் செய்த ஜோடி, 30களில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டார்கள். இப்போது 40களில் அவர்களின் டிரான்ஸ்மிஷன் பார்ப்போரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியப் பெண் ரஜினி சிங்கின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை பார்த்து பலர் வாயடைத்து போய் இருக்கிறார்கள். இப்படி இருந்த பெண்ணா... இப்படி மாறியிருக்கு என்று வாயை பிளந்து லைக்ஸ் போடாதவர்களே இல்லை.. வாருங்கள் பார்ப்போம்.

சென்னைக்கு முதல் முதலாக ஐடிவேலைக்கு வந்த இளம் பெண்களை, பெங்களூருக்கு முதல் முதலாக ஐடி வேலைக்கு வந்த பெண்களை அடுத்த 3 வருடம் கழித்து போய் பார்த்தால்.. நிச்சயம் அடையாளமே தெரியாது.. ஊர்கார பெண் போல் உடையில் இருக்கும் பெண்கள், நாகரீக மாற்றத்தால் உடையை, நடையை, அன்றாட வாழ்க்கை முறையை அடியோடு மாற்றி இருப்பார்கள்.

Married in my 20s 2 kids by my 30s and now in my 40s an amazing transformation

சத்தியமாக அவர்களே நான் தான் இது என்று சொன்னாலும், அவருடன் வேலை செய்பவர்கள் நம்பவே மாட்டார்கள். அந்த அளவிற்கு வாழ்க்கை முறையை மாற்றி இருப்பார்கள். வெறும் ஐடி வேலை மட்டுமல்ல.. உலகின் பல்வேறு பகுதிகளில் போய் வேலை செய்யும் பல பெண்கள், அங்குள்ள சூழலுக்கு ஏற்ப மாறிவிடுவார்கள்.

அதேபோல் சில இன்ஸ்டா பிரபலங்கள், நடிகைகள் வயது ஏற ஏற அழகாய் மாறிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் இன்ஸ்டா படங்களை பார்ப்போருக்கு இவருக்கு வயதே ஆகாதா என்று கேள்விகளை கேட்பார்கள். அந்த அளவிற்கு உடையிலும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் கவனமாக இருப்பார்கள். அந்த வகையில் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியப் பெண் ரஜினி சிங் வெளியிட்ட சமீபத்திய இன்ஸ்டாகிராம் ரீல் அனைத்தும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினி சிங் 20 வயதில் செய்து கொண்ட திருமணத்திலிருந்து தற்போது 40 வயது வரையிலான வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் ஒரு இதயப்பூர்வமான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இன்ஸ்டா பிரியர்களை வியப்பில் ஆழ்த்தியது. 23 வயதில் திருமணமான ரஜினியும் அவரது கணவர் டேல் ஆஸ்டனும் 30 வயதிற்குள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுள்ளனர். ஆனால் 40 வயதில் அவர்களின் அற்புதமான மாற்றம்தான் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.

ரஜினி சிங் வெளியிட்ட வீடியோவில், அந்த ஜோடி கடந்த 20 வருடங்களில் எப்படி எல்லாம் உருமாற்றம் அடைந்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது. மேலும் அவர்கள் வயது ஏற ஏற எவ்வளவு இளமையாகவும் துடிப்பாகவும் மாறியிருக்கிறார்கள் என்பதும் பார்த்த உடனே தெரிகிறது. ரஜினி சிங்கின் கணவர் வெள்ளை தாடியுடன் இருந்தாலும், ஃபிட்டாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறார்.

அதே நேரத்தில் ரஜினி சிங், மிக அழகாகவும், இளமைத் தோற்றத்துடன் பார்வையாளர்களை நம்பமுடியாத மனநிலைக்கு தள்ளியிருக்கிறார். அவரது ஸ்டைல், நம்பிக்கை மற்றும் ஆரோக்கியத்திற்காக அவர் காட்டிய அக்கறை அவரது உடல் மொழியிலும், அவரது தோற்றத்திலும் தெரிகிறது. இது அவர் வயது பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

11.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் பார்த்த, இந்த ரீல் இப்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் இந்த ஜோடியின் உருமாற்றத்தை பாராட்டி உள்ளனர். உங்கள் வயது குறைந்து கொண்டே வருவது போல் இருக்கிறது என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+