Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருது சேனை ஆதிநாராயணன் கைது.. கொலை முயற்சி விவகாரத்தில் “ட்விஸ்ட்”.. சென்னையில் சிக்கிய கும்பல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருது சேனை தலைவர் ஆதிநாராயணன் மீது வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற கும்பலை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக, துப்பாக்கியால் சுட்டதற்காக ஆதிநாராயணனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவர், மருது சேனை எனும் அமைப்பை தொடங்கி, அதன் நிறுவன தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டார் ஆதிநாராயணன்.

Marudhu senai leader adhinarayanan and others arrested

வரும் லோக்சபா தேர்தலில் மருது சேனை கட்சி, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார் மருது சேனை நிறுவனர் ஆதிநாராயணன்.

இந்நிலையில், கடந்த மார்ச் 14ஆம் தேதி மதியம் சுமார் 12 மணி அளவில் கள்ளிக்குடி - கல்லுப்பட்டி சாலையில் உள்ள மருது சேனை அலுவலகத்தில் இருந்து கள்ளிக்குடி - விருதுநகர் நான்கு வழி சாலையிலுள்ள மையிட்டான்பட்டிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார் ஆதிநாராயணன்.

அப்போது மைட்டான்பட்டிக்குள் நுழையும் பகுதியில் இவரது கார் சென்ற போது, எதிர் திசையில் வேகமாக வந்த கார் ஒன்று ஆதிநாராயணன் கார் மீது மோதியது. காரில் வந்த கும்பல், ஆதிநாராயணன் காரை நோக்கி பெட்ரோல் குண்டை வீசி உள்ளது. அந்த குண்டு அவரது காரின் மீது விழவில்லை.

ஆதிநாராயணன் காரை ஓட்டிய டிரைவர், உடனடியாக சாலை ஓரம் பள்ளத்தில் காரை இறக்கி, தப்பிக்க முயன்றார். ஆனாலும், அக்கும்பல் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயன்றது. அப்போது காரின் முன் பகுதியில் குண்டு விழுந்து வெடித்தது. தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பியுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்த கள்ளிக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தினர். கள்ளிக்குடி காவல் நிலையத்தில் ஆதிநாராயணன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இந்த கொலை முயற்சி சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

வெடி குண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் திருமங்கலம் சிவபிரகாஷ் 23, விருதுநகர் முகமது தவ்பிக் 26, சுபாஷ் சந்திர போஸ் 28, கள்ளிக்குடி கார்த்திக் 26, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததால் அவர்களையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் பதுங்கி இருந்த அப்துல் மஜீத், மாடசாமி, ஜாம் பஜார் ரோஹித், நயாஸ், பூபதி, சாய்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து தான் ஆதி நாராயணன் காரில் குண்டு வீசி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக, ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கொடுத்த வாக்குமூலத்தில் தாங்கள் பெட்ரோல் குண்டு வீசியபோது ஆதிநாராயணன் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் அதனால் தான் இரண்டாவது பெட்ரோல் குண்டு வெடிப்பதற்கு முன்பே கைதவறி கீழே விழுந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரித்த போலீசார் நேற்று ஆதிநாராயணன், நவீன் குமார், சேதுபதி, பழனி குமார், லட்சுமண பெருமாள், சுபையா கான் ஆகிய ஆறு பேரையும் கைது செய்து திருமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சண்முகராஜ் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி குண்டுகளின் காலியான மூன்று குப்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதுக்குப் பிறகு மருத்துவ பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட ஆதிநாராயணனை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+