சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Marxist Communist candidates list announced ahead of tn assembly election

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களம் காண்கிறது. கூட்டணிக் கட்சிகள் சில உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், மொத்தம் 188 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனிடையே நேற்று 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கூட்டம் இன்று (13.03.2021) மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில்,

  • கீழ்வேளூர்- முன்னாள் எம்.எல்.ஏ. நாகை மாலி
  • திருப்பரங்குன்றம்- எஸ்.கே. பொன்னுத்தாய்
  • அரூர் (தனி) - ஏ. குமார்
  • திண்டுக்கல்- எம். பாண்டி
  • கோவில்பட்டி- கே. சீனிவாசன்
  • கந்தர்வகோட்டை (தனி) - எம். சின்னதுரை

ஆகியோர்களை வேட்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Marxist Communist candidates list announced ahead of tn assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X