எந்த வகையில் நியாயம்..? ரயில்வே வாரியத்துக்கு இது அழகல்ல... மார்க்சிஸ்ட் கம்யூ. கடும் எதிர்ப்பு..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்வே வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்தோர் காத்திருக்கும் போது, உ.பி.யை சேர்ந்தவர்களை இங்கு பணி நியமித்திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ரயில்வே வாரியம்

ரயில்வே வாரியம்

வடகிழக்கு ரயில்வே வாரியம் 2018ல் உதவி ரயில் ஓட்டுனர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்கு தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

மதிப்பெண்

மதிப்பெண்

எந்த ரயில்வேக்கு தேர்வு எழுதுகிறார்களோ அந்த ரயில்வேக்கு தான் அவர்கள் நியமிக்கப்பட வேண்டும். வேறு ரயில்வேக்கு அவர்கள் நியமிக்கப்படக் கூடாது. ஆனால், உத்திரப்பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரும் தெற்கு ரயில்வேயில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விட குறைவானதாகும்.

சுட்டிக்காட்டல்

சுட்டிக்காட்டல்

ஒரு ரயில்வே வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்னொரு ரயில்வே வாரியத்தில் நியமிக்கப்படக்கூடாது என்பது தெளிவாக இருந்தும், கோரக்பூரில் தேர்வானவர்களை சென்னையில் நியமித்தது சட்ட விரோதமாகும். இது தென் மாநில ரயில்வே விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு, ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பதாகவும் இருக்கிறது. இது குறித்து எங்களது கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். எனவே, இப்பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கோரக்பூர் விண்ணப்பதாரர்களை கோரக்பூருக்கு திருப்பி அனுப்பவும், தென் மாநில ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அந்த உதவி ஓட்டுனர் காலியிடங்களில் உடனடியாக நிரப்ப வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+