ஜெம் வீரமணி வழக்கை தவெக வெளியே கொண்டு வரவில்லை! கேஸை மூட பார்த்ததே விஜய் அரசுதான்! சிபிஎம் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி வழக்கை தவெக அரசுதான் வெளியே கொண்டு வந்ததாக சொல்வது தவறு, இன்னும் சொல்ல போனால் இந்த வழக்கை தவெக அரசு முடிக்க பார்த்தது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் வீரமணி மீது நடவடிக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று சென்னை தரமணியில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

Marxist Shanmugam

அப்போது அவர் பேசியதாவது: ஜெம் வீரமணி வழக்கில் இப்போது இருக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளது.

தவெக அரசு ஏதோ தானாகவே முன் வந்து இந்த வழக்கை நேர்மையான முறையில் நடத்துவதை போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் இப்போது இருக்கக் கூடிய தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில், இந்த வழக்கை முடித்துக் கொள்வது என்கிற மொழியில்தான் இருந்தது.

தங்களால்தான் இந்த வழக்கு தீவிரப்படுத்தப்படுகிறது என்று தவெகவினர் சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை முதலில் நான் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

எனவே ஜெம் வீரமணி வழக்கு தீவிரப்படுத்தப்படுவதற்கும், பலர் கைது செய்யப்பட்டதற்கும் அடிப்படையாக இருப்பது போக்சோ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிதான் என்பதை நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இந்த வழக்கில் யாரையும் காப்பாற்றுவதற்கு தாங்கள் தலையிடவில்லை. எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

திமுக ஆட்சியில் இருந்த போது புகார் அளிக்கப்படுகிறது. முறையாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு ஏன் மேல் விசாரணை நடத்தப்படவில்லை? அந்த வீடியோ தெளிவாக இல்லை என்ற ஒற்றை காரணத்தைச் சொல்லி இவ்வளவு பெரிய வழக்கை முடித்து வைக்க முடியுமா?

அதற்கான அரசியல் அழுத்தத்தை கொடுத்தது யார்? அதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் யார்? என்பதற்கு அவருடைய அறிக்கையில் எந்தவிதமான பதிலும் இல்லை. ஆட்சியில் இருந்த காலத்தில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே இந்த புகார் எழுத்துப்பூர்வமாக கொடுத்ததாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் இப்போது பேசுகிறார்.

2025 ஆம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையே நடத்தப்படாமல் ஆதாரங்கள் இல்லை என்ற பெயரில் இந்த வழக்கை முடித்து வைப்பதற்கு திமுக ஆட்சியில் முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே மு.க.ஸ்டாலின் இதை கடந்து செல்ல முடியாது. தனது ஆட்சிக் காலத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தாததற்கு அவர்தான் தார்மீக ரீதியாக பொறுப்பேற்க வேண்டும்.

திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் பணிபுரிந்த காவல் துறை அதிகாரிகள், கூட்டாக சதி செய்து குற்றத்தை மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பல கோடி ரூபாய் இந்த விவகாரத்தில் கை மாறப்பட்டிருக்கிறது என சண்முகம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+